இம்பூட்டு பாவங்களுக்கு பின்னாடியும் நாட்டுல எப்படிடா மழை பெய்யுது?: இந்த கேள்விக்கு இதோ இருக்கு பாஸு விடை!

By Vishnu PriyaFirst Published Jan 21, 2020, 5:55 PM IST
Highlights

‘எங்களுக்கு தெரியாதே. ஆளை மட்டும்தான் கொண்டாந்தோம்’ என்று சிம்பிளாக மேட்டரை முடிச்சுட்டு போயிருக்கலாம் அவங்க. ஆனால் அப்படி செய்யலை. மனிதாபிமானம், நேர்மை, செய்யும் தொழிலில் பயபக்தியோடு செயல்பட்டிருக்காங்க.

மனுஷங்களாடா நீங்கள்லாம்?....இந்த வார்த்தையை ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு வாட்டியாவது கேட்டுடுறோம். அந்தளவுக்கு பகை, பொறாமை, பழிக்குப் பழி, காலை வாருறது, ஏமாத்துறது, கள்ளத்தனம் பண்றதுன்னு வெரைட்டி வெரைட்டியா ரவுண்டு கட்டி ரவுசுத்தனம் பண்ணிட்டு இருக்குறோம். பயபுள்ளைக நாம பண்ணுற பாவத்துல பூமி ச்சும்மா ஜிவ்வ்வ்வுன்னு சூடேறி இந்நேரத்துக்கு வெடிச்சு செதறியிருக்கணும். ஆனால்,அதையெல்லாம் மீறி இன்னும் பூமி சுகமா சுத்திட்டுதான் இருக்குது, நாட்டுல நல்லா மழையும் பெய்யுது! இம்பூட்டு பாவங்களுக்குப் பிறகும் இன்னமும் மழை பெய்யுதுங்கிறது மிகப்பெரிய அதிசயம்தான். அதுக்கான காரணம்? ஆங்காங்கே அடிக்கடி நடக்கும் நெகிழ வைக்கும் நிகழ்வுகளும், இவ்வளவு பாவிகளுக்கு நடுவில் சில அப்பாவிகளும் இருக்குறதும், ’அடுத்தவனும் வாழணும்! அநியாயம் சாகணும்!’ அப்படின்னு நினைக்கிற மனுஷங்களும் வாழ்ற காரணத்தாலேதான். 

ரோட்டுல ஒத்த ரூபா கிடந்தாலும், ஓடிப்போயி அமுக்கிக்குற மக்களுக்கு மத்தியில, செத்துப் போன மனுஷனோட பையில இருந்த பணம், நகைகளை அவரோட குடும்பத்துகிட்ட ஒப்படைச்ச மனுஷங்க பற்றிய கதை இது....திருத்தணி அருகே திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். 77 வயதான இந்த மனிதர் நேற்று தன்னோட பைக்கில் போயிட்டு இருந்தப்ப எதிர்ல வந்த இன்னொரு பைக்கில் மோதிடுச்சு. அவரை 108 ஆம்புலன்ஸ்ல ஏற்றி, திருவள்ளூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பியிருக்குது போலீஸ். ஆனால் பாதி வழியிலேயே பரிதாபமா இறந்துட்டார் அந்த மனுஷன். ஆம்புலன்ஸிலிருந்த நர்ஸ் முத்துமணி, வேணுகோபால் இறந்துட்டதை டிரைவர் குமாரிடம் சொல்லியிருக்கிறார். 

நேரா  அரசு மருத்துவமனைக்கு போயி, பிணத்தை இறக்கிட்டு, உறவினர்களுக்கு தகவல் சொல்றதுக்காக வேணுகோபால் வெச்சிருந்த பையை செக் பண்ணியிருக்காங்க, அட்ரஸுக்காக. பையில் ஒருலட்சத்து இருபத்து ஆறாயிரத்து அறுபது ரூபாய் பணம், ஒரு தங்க மோதிரம், ஒரு மொபைல் போன்...இவ்வளவும் இருந்திருக்குது. அதை அப்படியே மருத்துவமனை நிர்வாகத்திடம் குமாரும், முத்துமணியும் ஒப்படைச்சிருக்காங்க. 

 

தாத்தா இறந்ததை கேள்விப்பட்டு வந்த அவரோட பேரனிடம் இந்த பணமும், பொருளும் ஒப்படைக்கப்பட்டு இருக்குது. 
விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்ற பறக்கிற ஆம்புலன்ஸ் வேலையை செய்யுறதே பெரிய புண்ணியம். 108 பணியாளர்களுக்கு உருப்படியான சம்பளங்கள் தரப்படுவதில்லை எனும் நிலையிலும், இறந்தவரின் பணத்தையும், விலைமதிப்பான பொருளையும் அவரோட குடும்பத்திடம் ஒப்படைக்கவும் ஒரு மனசு வேணும். அதை குமாரும், முத்துமணியும் செஞ்சிருக்காங்க. வேணுகோபாலிடமிருந்த பணத்தை எடுத்து பதுக்கிட்டு, உறவுக்காரங்க கேக்குறப்ப ‘எங்களுக்கு தெரியாதே. ஆளை மட்டும்தான் கொண்டாந்தோம்’ என்று சிம்பிளாக மேட்டரை முடிச்சுட்டு போயிருக்கலாம் அவங்க. ஆனால் அப்படி செய்யலை. மனிதாபிமானம், நேர்மை, செய்யும் தொழிலில் பயபக்தியோடு செயல்பட்டிருக்காங்க. இப்ப புரியுதா எவ்வளவோ பாவங்களுக்கு நடுவிலும், எப்படி மழை பெய்யுதுன்னு?பதவிக்கு வர்றதே பதுக்குறதுக்குதான்னு நினைக்கிற அரசியல்வாதி பாய்ஸ், இவங்களையெல்லாம் பார்த்து திருந்துங்கப்பு!
-    

-விஷ்ணுப்ரியா

click me!