பாஜக செய்கிறதா..? கோழைகள் தான் இதை செய்கிறார்கள்.. பெரியார் சிலை குறித்து 'குஷ்பு' கொந்தளிப்பு !

Published : Jan 10, 2022, 12:23 PM IST
பாஜக செய்கிறதா..? கோழைகள் தான் இதை செய்கிறார்கள்.. பெரியார் சிலை குறித்து 'குஷ்பு' கொந்தளிப்பு !

சுருக்கம்

கோயம்புத்தூரில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும்,கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள் என்றும் பாஜகவை சேர்ந்தவரும், ,நடிகையுமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கோவையை அடுத்த வெள்ளலூர் பஸ் நிலையம் அருகே தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது. இந்த சிலையை நேற்று காலையில் பொதுமக்கள் பார்த்தபோது சிலைக்கு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிந்தும் தலை பகுதியில் குங்குமத்தை தூவிவிட்டும் அவமரியாதை செய்ததாக தெரிகிறது. இதைப் பார்த்ததும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். மேலும் அந்த சிலை அருகே பெரியாரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுதொடர்பாக போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டர் பதிவை வெளியிட்ட பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு, “தந்தை பெரியார் பலராலும் போற்றப்படுகிறார்,அவரை நாம் மதிக்க வேண்டும்.

 

ஆனால், நேற்று கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.இந்த வெட்கக்கேடான செயலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.பெரியார் சிலைக்கு ஆரஞ்சு வண்ணம் தீட்டுவது ஒரு அவமரியாதை செயலின் தெளிவான அறிகுறியாகும்.கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள்’ என்று கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!