இவ்வளவு சீக்கிரம் காங்கிரஸையும் கழுவி ஊத்திய குஷ்பு...!! டெல்லியில் படுத்ததால் தாறுமாறு விமர்சனம்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 13, 2020, 1:52 PM IST
Highlights

என்று நமக்குள்ளேயே நாம் கேட்டுக் கொண்டாள் இல்லை என்று பதில் கிடைக்கும்  .  இப்போதிலிருந்து நாம் பணியை தொடங்க வேண்டும் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று அர்த்தம். 
 

டெல்லியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு சரி இல்லை என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான குஷ்பூ விரக்தி தெரிவித்துள்ளார் . டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததுள்ளது.   மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில்,   ஆம்ஆத்மி 62 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது .  பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி ஆகியுள்ளது .  காங்கிரஸ் 63 தொகுதிகளில் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்திருப்பது காங்கரஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில்  காங்கிரஸ் கட்சின் நிலைமை குறித்து அக்கட்சியின் தலைவர்கள் மத்தியில் மோதல் எழுந்துள்ளது.  காங்கிரஸின்  நிலைமை குறித்து அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார் அதில் , டெல்லியில் காங்கிரசுக்காக எந்த மாயாஜாலத்தை எதிர்பார்க்கவில்லை.   காங்கிரஸ் மீண்டும் மீண்டும் டெல்லியில் துடைத்து எறியப்பட்டுள்ளது.   இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது நாம் போதுமானதை அங்கு செய்கிறோமா.?  நாம் சரியான பாதையில் செல்கிறோமா.?  சரியானதை செய்கிறோமா.?  என்று நமக்குள்ளேயே நாம் கேட்டுக் கொண்டாள் இல்லை என்று பதில் கிடைக்கும்  . இப்போதிலிருந்து நாம் பணியை தொடங்க வேண்டும் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று அர்த்தம். 

இதையும் படியுங்க:-  பயந்து ஓட மாட்டேன்... எடப்பாடியை எச்சரிக்கும் கேசி பழனிச்சாமி...!! சிறை வாசலில் அதிரடி பேட்டி...!!

அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம்வரை  பல விஷயங்கள் செய்ய வேண்டும் . அதே நேரத்தில் மக்கள் வெறுப்பு விஷயம் நிரம்பிய ஆபத்தான அமித்ஷா மோடி அராஜக கும்பல் தோல்வியுற்றுள்ளது.   மக்கள் அவர்களை புறக்கணித்து உள்ளார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது . டெல்லியில் செய்வதைப்போல, நடந்ததையும்  மறு பார்வை பார்த்து இப்போது நமக்கு நேரமில்லை ,  ஒவ்வொரு வெற்றிக்கு பிறகு நாம் அப்படி செய்வதில்லை . மகாத்மா காந்தி சொன்னது போல நீ காண விரும்பும் மாற்றமாக நீயே மாறிவிடு என்ற வார்த்தைபடி நாம் செயல்பட வேண்டும் .முதலில் நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்,   நான் நமது பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்...

click me!