தமிழக அரசை தாறுமாறாக விமர்சித்த சீமான்..! 2 ஆண்டுகளுக்கு பின் வழக்கு பதிந்த காவல்துறை..!

By Manikandan S R SFirst Published Feb 13, 2020, 1:30 PM IST
Highlights

சீமானின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் விதமாக இருந்ததாகவும் மக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாக கருத்துக்களை அவர் தெரிவித்திருந்ததாகவும் காவல்துறை கூறுகிறது. இந்தநிலையில் தான் கோட்டுர்புரம் காவல்நிலையத்தில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2018 ம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி காமராஜர் நினைவு நாளில் சென்னை கிண்டியில் இருக்கும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் வருகை தந்திருந்தார். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு அங்கு திரண்டிருந்த செய்தியாளர்ளுக்கு சீமான் பேட்டியளித்தார்.

அப்போது தமிழக அரசை அவர் கடுமையாக விமர்சித்தார். அதற்காக இரண்டு ஆண்டுகள் கழித்து தமிழக காவல்துறை தாமாக முன்வந்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. சீமானின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் விதமாக இருந்ததாகவும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை அவர் தெரிவித்திருந்ததாகவும் காவல்துறை கூறுகிறது. இந்தநிலையில் தான் கோட்டுர்புரம் காவல்நிலையத்தில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அரசுக்கு எதிராக உள்நோக்கத்துடன் சீமான் தவறான கருத்துக்களை பரப்பியதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு குறித்தும் அமைச்சர்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக சீமான் மீது வழக்கு வழக்கு பதிவாகி இருக்கிறது. அவையெல்லாம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டவையாகும். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பேசியதற்கு தற்போது வழக்கு பதிவாகி இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கோர தாண்டவமாடும் கொடூர கொரோனா..! ஒரே நாளில் 242 உயிர்களை பறித்தது..!

click me!