பிரதமர் மோடியை சீண்டிய நடிகை குஷ்பூ.! விளக்கு வைக்கிறேன்,லைட் அடிக்கிறேன்னு மக்கள் வெளியில் வராதீர்கள்.!!

Published : Apr 03, 2020, 09:14 PM IST
பிரதமர்  மோடியை  சீண்டிய நடிகை குஷ்பூ.! விளக்கு வைக்கிறேன்,லைட் அடிக்கிறேன்னு மக்கள் வெளியில் வராதீர்கள்.!!

சுருக்கம்

மோடியின் விளக்கேற்றும் அறிவிப்பு  குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் மோடியை வெளுத்துவாங்கியிருக்கிறார். 

T.Balamurukan

இந்தியாவில் கொரோனா வைரஸ்  நாளுக்கு நாள் வேகமெடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் இன்று காலை வீடியோ மூலம் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, கொரோனா இருளை அகற்ற வரும் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மக்கள் வீட்டு வாசல் அல்லது பால்கனியில் விளக்கு வைக்க வேண்டும் அல்லது டார்ச்லைட் அடிக்க வேண்டும் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், மோடியின் விளக்கேற்றும் அறிவிப்பு  குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் மோடியை வெளுத்துவாங்கியிருக்கிறார். அதில், "யுரேகா!! கொரோனாவை எதிர்க்க என்ன ஒரு அற்புதமான வழி..இப்படி செய்வதால் கோவிட் பிரச்சனை தீர்ந்துவிடுமா?? விளக்கு வைக்கிறேன் என்று தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். சோஷியல் டிஸ்டன்ஸிங் தான் தற்போது மிகவும் முக்கியம். ப்ளீஸ் என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!