கர்நாடகத்தில் கூட்டமாக தொழுகைக்குச் சென்றவர்களை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு.!

By Thiraviaraj RMFirst Published Apr 3, 2020, 8:05 PM IST
Highlights

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் இஸ்லாமிய அமைப்பின் சார்பில் நடந்த மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்களே தற்போது இந்தப் பாதிப்பில் சிக்கியவர்களில் அதிகம் இருப்பதாக வெளியாகியுள்ளது. 

T.Balamurukan

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் இஸ்லாமிய அமைப்பின் சார்பில் நடந்த மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்களே தற்போது இந்தப் பாதிப்பில் சிக்கியவர்களில் அதிகம் இருப்பதாக வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மாவட்ட ரீதியாக எத்தனை பேர் தப்லீக் மாநாட்டிற்கு சென்றவர்கள் பட்டியல் படி அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனியிலும், தனிமைப்படுத்தலிலும் வைத்திருக்கிறது சுகாதாரத்துறை.

டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. தமிழகம் திரும்பிய 515 பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தியுள்ளோம். மீதமுள்ள நபர்களின் தொலைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. அனைவரும் தயவுசெய்து சுகாதாரத்துறையைத் தொடர்பு கொள்ளுங்கள். தானாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" என்றும் சுகாதாரத்துறை செயலர் பீலாராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவை சேர்ந்த 379 இஸ்லாமியர்கள் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட வெளிநாட்டினர் பட்டியலில் 110 வங்கதேசத்தினர், 65 தாய்லாந்து நாட்டினர் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 டெல்லியில் மாநாட்டை நடத்தியது தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்தான் என்று முதலில் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால், டெல்லியில் நாங்கள் எந்த மாநாடும் நடத்தவில்லை என்றும் அமைப்பின் பெயர் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் அந்த அமைப்பு விளக்கம் அளித்தது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பள்ளிவாசலில் நடந்த மாநாடு `தப்லிக் ஜமாத்' என்கிற அமைப்பின் சார்பில் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 


தமிழகத்தில் நேற்று மட்டும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அதில் 74 பேர் டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை தமிழகத்தில் மட்டும்410 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல்கள் தெரியவந்திருக்கிறது. இந்தநிலையில்,

 கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் கூட்டமாக தொழுகை நடத்துவதை தடுக்கச் சென்ற  போலீஸ் மீது கல்வீச்சு நடத்தி இருக்கிறார்கள். தொழுகைக்கு சென்றவர்கள் கல்வீசி தாக்கியதில் பெண் போலீஸ் உள்பட 4 காவலர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். சமாதானப்படுத்த சென்ற சமுதாய தலைவர்கள் ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படித்தியிருக்கிறது. டெல்லி மாநாடு சென்றவர்கள் சுகாதாரப்பணியாளர்களை விரட்டி அடிப்பது வாடிக்கையாகிவிட்டது. நாடே கொரோனாவால் அல்லோலப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இஸ்லாமியர்கள் இதுபோன்று நடந்து கொள்வது பொதுமக்கள் மத்தியில் இதுபோன்ற செயல்கள் அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!