ஆபாசமாக பேசுபவனை விட்டு விட்டு..! பெண்களைத் தண்டிப்பதா.? இது மானம்கெட்ட பிழைப்பு- கஸ்தூரி ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Nov 23, 2022, 2:09 PM IST

பெண் நிர்வாகியை மோசமான வார்த்தைகளால் பேசியவரை விட்டு விட்டு, பெண்களை தண்டிப்பது தான் உங்கள் அரசியலென்றால் அதைவிட மானம் கெட்ட பிழைப்பு உலகில் இல்லையென நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.


பாஜக நிர்வாகிகள் மோதல்

தமிழக பாஜகவில் நேற்று ஒரே நாளில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவாவிற்கும், சிறுபான்மையினர் மாநில தலைவர் டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் மிகவும் மோசமான ஆபாச வார்த்தைகளால் டெய்சி சரணை சூர்யா திட்டியுள்ளார். பாஜகவில் நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பதவி வாங்கினீர்கள் என தெரியும்,  அறுத்து மெரினா வில் எறிஞ்சுருவோம், நீ யாரிடம் வேண்டும் என்றாலும் செல் அண்ணாமலையிடம் சொல், அமித் ஷா, மோடியிடம் சொல் என ஆபாச வார்த்தைகளால் பேசி திட்டியது  பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tap to resize

Latest Videos

15 நாட்களுக்கு முன்பே புகார்.? அறிவுரை வழங்கிய அண்ணாமலை.! ஆடியோ வெளியானதால் சூர்யா சிவா மீது நடவடிக்கையா ?

ஒழுங்கு நடவடிக்கை- அண்ணாமலை

 இந்த சம்பவத்தை அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் அதுவரை கட்சி நிகழ்ச்சிகளில் சூர்யா சிவா கலந்து கொள்ள தடை விதிப்பதாக அண்ணாமலை உத்தரவிட்டார். இந்த சம்பவம் அடங்குவதற்குள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராமை கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார் என்ற மற்றொரு அறிக்கையும் வெளியானது.

டுவிட்டரில் கோவையை சேர்ந்த பாஜக நிர்வாகி தன்னை தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவும், காசி தமிழ் சங்கத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லையெனவும் காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அவரை 6 மாதத்திற்கு  நீக்கப்பட்டது பாஜக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியது.

**டையை அறுத்து மெரினா வில் எறிஞ்சுருவோம்
நத்தா மோடி அண்ணாமலை யார் கிட்டே வேணா போ
படுத்து பதவி வாங்கின உனக்கே திமிருன்னா...
என் ஜாதிக்கு எனக்கு எவ்வளவு இருக்கணும்
பேசுபவனை விட்டுட்டு பெண்களை தண்டிப்பதுதான் உங்கள் அரசியலென்றென்றால்...அதை விட மானம்கெட்ட பிழைப்பு உலகில் இல்லை. https://t.co/7XPkHoczpS

— Kasturi Shankar (@KasthuriShankar)

 

 மானம்கெட்ட பிழைப்பு- கஸ்தூரி

இந்தநிலையில் காயத்ரி ரகுராமிற்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்.  **டையை அறுத்து மெரினா வில் எறிஞ்சுருவோம், நத்தா  மோடி அண்ணாமலை யார் கிட்டே வேணா போ, படுத்து பதவி வாங்கின உனக்கே  திமிருன்னா... என் ஜாதிக்கு எனக்கு எவ்வளவு இருக்கணும், பேசுபவனை விட்டுட்டு பெண்களை தண்டிப்பதுதான்  உங்கள் அரசியலென்றென்றால்... அதை விட  மானம்கெட்ட பிழைப்பு உலகில் இல்லை. என கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பாஜக என்ற பேருந்தில் தவறு செய்பவர்கள் இறக்கி விடப்பட்டு, புதியவர்கள் அழைத்துச் செல்லப்படுவர்- அண்ணாமலை

click me!