திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி மீண்டும் நியமனம்.. துணைச்செயலாளர்களாக 9 பேர்..!

Published : Nov 23, 2022, 12:57 PM ISTUpdated : Nov 23, 2022, 01:08 PM IST
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி மீண்டும் நியமனம்.. துணைச்செயலாளர்களாக  9 பேர்..!

சுருக்கம்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக இளைஞரணி துணைச்செயலாளர்களாக ஜோயல் உள்பட 9 பேரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். 

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக இளைஞரணி துணைச்செயலாளர்களாக ஜோயல் உள்பட 9 பேரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். 

இதுதொடர்பாக திமுக பொதுதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தி.மு.க. சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின்படி மாநில இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள் தலைமைக் கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார். 

 இளைஞர் அணிச் செயலாளர்- உதயநிதி

 இளைஞர் அணி  துணைச் செயலாளர்கள்- எஸ்.ஜோயல், ந.ரகுபதி(எ) இன்பா, நா.இளையராஜா, ப. அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா (எ) பிரதீப்ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!