தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கோஷ்டியை சேர்ந்தவர் நடிகை காயத்ரி ரகுராம்.
பாஜகவின் உள் விவகாரங்களை முன்வைத்து சமூக வலைதளப் பக்கங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார் நடிகை காயத்ரி. இதனால் பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தம்மை பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதை வரவேற்று நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டிருந்த அறிக்கை பெரும் சர்ச்சையானது.
அதேபோல சமீபத்தில், நடிகை காயத்ரி ரகுராம் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தமிழக பாஜகவில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
இதையும் படிங்க..தே.ஜ கூட்டணிக்கு ஆப்பு வைத்த எடப்பாடி பழனிசாமி.. டெல்லிக்கு போகும் அண்ணாமலை - டெல்லியின் பிளான் கைகொடுக்குமா?
அந்த பதிவில், அடையாறு வார்ரூம் படி- நான் திமுகவின் ஸ்லீப்பர் செல், இப்போது ஓபிஎஸ் கூட திமுக ஸ்லீப்பர் செல், சவுக்கு சங்கர் பாஜக ஸ்லீப்பர் செல், அண்ணாமலை பிஜிஆர் & கர்நாடகா காங்கிரஸ் ஸ்லீப்பர் செல், இங்கு யாருக்கு எவ்வளவு சம்பளம் எக்ஸெல் ஷீட் ஆதாரம் போட்டால் அது பொதுமக்களுக்கு நன்றாக புரியும்.
ஓபிஎஸ்-ஐ திமுக ஸ்லீப்பர் செல் என்று சொல்ல யாருக்கும் தைரியம் இல்லையா ? அண்ணாமலை அடையார் வார்ரூம் பாய்ஸ்' என்று பதிவிட்டுள்ளார். தமிழக பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகை காயத்ரி ரகுராம். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம் நினைவு சின்னம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருந்தாலும் நாகரிகத்துடன் பேச வேண்டும். கலைஞரை எனக்கு பிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு நினைவுச் சின்னம் வைத்துள்ளதால் கலைஞருக்கு நினைவு சின்னம் வைப்பது பற்றி பொதுவாக எதுவும் கூற முடியாது. பேனா சின்னத்தால் பாதிப்பு ஏற்படும் என்பது உறுதியானது பிறகே அது குறித்து கருத்து சொல்லப்படும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..ஓபிஎஸ் எடுத்த கடைசி அஸ்திரம் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த பன்னீர் அணி !!