பாஜக சார்பில் நடிகை கவுதமி ராஜபாளையத்தில் போட்டி?... தொகுதி பங்கீட்டிற்கு முன்பே பணியை தொடங்கியதால் பரபரப்பு!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 28, 2021, 06:34 PM IST
பாஜக சார்பில் நடிகை கவுதமி ராஜபாளையத்தில் போட்டி?... தொகுதி பங்கீட்டிற்கு முன்பே பணியை தொடங்கியதால் பரபரப்பு!

சுருக்கம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் நடிகை கவுதமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக நீடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ராஜபாளையத்தில் நடிகை கெளதமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் நடிகை கவுதமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பேசிய சுதாகர் ரெட்டி ‘ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் கவுதமி வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவரும் அவர் வெற்றிக்கு பாடுபட வேண்டும்’ எனக்கூறியுள்ளார். அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு இன்னும் நிறைவடையாத நிலையில் ராஜபாளையத்தில் கவுதமி போட்டியிடுகிறார் என பாஜக பொறுப்பாளர் தெரிவித்தது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!