"சுயநலத்தால் இரட்டை இலை பறிபோனது" - கட்சிப் பதவியை தூக்கியெறிந்த நடிகை ஆர்த்தி...

Asianet News Tamil  
Published : Mar 23, 2017, 04:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
"சுயநலத்தால் இரட்டை இலை பறிபோனது" - கட்சிப் பதவியை தூக்கியெறிந்த நடிகை ஆர்த்தி...

சுருக்கம்

actress aarthi resigned from aiadmk

அதிமுகவின்  இரட்டை இலை முடக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளாளன சசிகலாவுக்கும் ஓ.பி.எஸ்.க்கும் இடையே ஏற்பட்ட பிணக்கும் பிளவும், தற்போது அக்கட்சியின் பெயரையும் சின்னத்தையும் முடக்கும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக என்ற பெயரும் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டிருப்பது அக்கட்சியில் இருக்கும் அடித்தட்டு தொண்டர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போதைய  தலைமையை விரும்பாத பலர்  அதிமுகவில் இருந்து விலகி வருகின்றனர். நட்சத்திரப்பேச்சாளர்கள் ,ஆனந்தராஜ், நிர்மலா பெரியசாமி ஆகியோர் சமீபத்திய உதாரணம்...

இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் நடிகை ஆர்த்தி.. அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக டிடிவி தினகரனுக்கு ஆர்த்தி கடிதம் எழுதியுள்ளார். 

அதில், " " நான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து இன்று நகைச்சுவை நடிகையாக திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் அரசியலில் நடித்து மக்களை ஏமாற்ற தெரியாததால், மிகுந்த மனவேதனையுடன்  அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்  பொறுப்பிலிருந்து ராஜினாமா  செய்கிறேன்." இவ்வாறு தனது 2 பக்க விலகல் கடிதத்தில் ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!
Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!