
நடிகர் ஜெய், பிரேம்ஜி சென்ற கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் இவர்கள் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை
ஆனால், சற்று தடுமாறி நடிகர் ஜெய் காரை ஒட்டி வந்துள்ளார். இவர் அடையாறு தடுப்பு சுவரில் மோதியதால், அவருடைய காரும் சற்று சேதம் அடைந்துள்ளது. மேலும் அவர் குடிபோதையில் கார் ஒட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதற்கான அபராதமாக ரூ.500 வசூலிக்கப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து குடி போதையில் கார் ஓட்டியது பொது இடத்தில் சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களால் அவர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த சம்பவத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு முன்னதாக இது போன்ற சொகுசு கார்கள் விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுவதற்கான காரணம் குடி தான் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்