
மனைவி சாயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நடிகர் ஆர்யா ரூ.70 லட்சம் பண மோசடி செய்ததாக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையைச் சேர்ந்த விட்ஜா, ஜெர்மனியில் குடியுரிமை பெற்றுக்கொண்டு அங்குள்ள சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் ஆர்யா மீது இந்திய உள்துறை அமைச்சகத்துக்கும், பிரதமர் மோடிக்கும் ஆன்லைன் வாயிலாக பரபரப்பு புகார் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அந்த புகாரில், நடிகர் ஆர்யா தன்னை காதலித்து வந்தார். என்னை திருமணம் செய்துகொள்வேன் என்றும் உறுதி அளித்தார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் பட வாய்ப்புகள் இல்லாததால் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறி என்னிடம் 70,40,000 ரூபாய் வரை பெற்றுக்கொண்டார். அனால் இதுவரை அவர் ஒரு ரூபாய் கூட திரும்ப கொடுக்கவில்லை.
இந்நிலையில், ஆர்யா என்னை போல பண பெண்களை ஏமாற்றியிருக்கிறார் என்பது எனக்கு தெரிய வந்தது. பல பெண்களை காதலிப்பதாக கூறி பணத்தையும் பெற்றுக்கொண்டு, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். என்னிடம் அவர் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதுபோல, என்னிடம் பேசியதற்கான மெசேஜ்களையும் ஸ்கிரீன் ஷாட்டுகளாக எடுத்து வைத்துள்ளேன். என் பணத்தை கேட்டு பலமுறை ஆர்யாவுக்கும், அவரது தாயுக்கும் பலமுறை போன் செய்தேன்.
அப்போது அவர்கள் என்னை ஆபாசமாக பேசியதுடன், சட்டத்தால் என்னை ஒன்றும் செய்யமுடியாது, எனக்கு அவ்வளவு செல்வாக்கு உள்ளது என்று கூறுகிறார்கள். இதுபோன்ற கிரிமினல்ஸ் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த புகாரின் பேரில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யாவுக்கு அண்மையில்தான் நடிகை ஆயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில்,விட்ஜா இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதற்காக ஆர்யாவை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் அவர் மீது ஒரு பெண் தன்னை ஏமாற்றி விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சார்பட்டா பரம்பரை படக்குழுவினருக்கும் சங்கடம் நேர்ந்துள்ளது.