எஸ்.பி.வேலுமணியை தொடர்ந்து அடுத்து எங்களுடைய டார்கெட் இவர் தான்.. அதிமுகவை அலறவிடும் அமைச்சர் நாசர்..!

Published : Aug 12, 2021, 03:51 PM IST
எஸ்.பி.வேலுமணியை தொடர்ந்து அடுத்து எங்களுடைய டார்கெட் இவர் தான்.. அதிமுகவை அலறவிடும் அமைச்சர் நாசர்..!

சுருக்கம்

முன்னாள் அமைச்சர் வேலுமணியை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதும் நடவடிக்கை பாயும். அவர்கள் மீது தவறு இல்லை என்றால் அதை நிரூபித்துவிட்டு வெளியே வரட்டும். அவர்கள், முறைகேடாக பல்லாயிரம் கோடி சேர்ந்து வைத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணியை தொடர்ந்து, முறைகேடாக பல ஆயிரம் கோடி சேர்த்துள்ள ஜெயக்குமார் மீது நடவடிக்கை பாயும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சியமைந்ததும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அதிமுக அமைச்சர்கள் மீது திமுக, அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பலர் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார்கள் மீது அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில புகார்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டன. சில ஊழல் புகார்கள் நீதிமன்றம் வரை சென்றன. இதேபோல் தேர்தலுக்கு முன்பு தமிழக ஆளுநரிடம் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக அமைச்சர்கள் மீது மிகப்பெரிய பட்டியலுடன் ஊழல் புகார்களை திமுக கொடுத்தது. அப்போது அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் அதில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். 

தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சியமைந்ததும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதுமே முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஊழல் செய்தது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில்,  காமராஜ், ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இடங்களிலும் போதிய ஆதாரம் திரட்டிய பிறகு விரைவில் சோதனை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அடுத்தது ஜெயக்குமார் தான் என கூறியுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆவடி நாசர்;- முன்னாள் அமைச்சர் வேலுமணியை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதும் நடவடிக்கை பாயும். அவர்கள் மீது தவறு இல்லை என்றால் அதை நிரூபித்துவிட்டு வெளியே வரட்டும். அவர்கள், முறைகேடாக பல்லாயிரம் கோடி சேர்ந்து வைத்துள்ளனர். அதனால் தான் அவர்கள் பதறுகின்றனர் என தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அனல் பறக்கும் தேர்தல் களம்..! பிப்.1 முதல் 234 தொகுதிகளிலும் பிரசாரத்தை தொடங்கும் திமுக..
திமுக வென்றால் நீட் தேர்வை ரத்து செய்வோம்... ரகசியத்தை வெளியிட்ட கனிமொழி..!