கிறிஸ்தவ மதத்தை நிதிக்காக ஊக்குவிக்கிறார் திருமாவளவன்... காயத்ரி ரகுராம் பகிரங்க குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Aug 12, 2021, 3:16 PM IST
Highlights

சில அரசியல் கட்சிகள் கிறிஸ்தவத்தை நிதிக்காக ஊக்குவிக்கின்றன என பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
 

சில அரசியல் கட்சிகள் கிறிஸ்தவத்தை நிதிக்காக ஊக்குவிக்கின்றன என பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும். நாட்டில் மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என அமக்களவையில்  திருமாவளவன் எம்.பி., குற்றம்சாட்டி இருந்தார். 

இதற்குப்பதிலடி கொடுத்துள்ள பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம், ‘’தலித் கிறிஸ்தவம் என்று எதுவும் இல்லை. கிறிஸ்தவத்தில் 9 வடிவங்கள் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் catholics அல்லது Protestants மாறுகிறார்கள். நீங்கள் இந்து தலித் சாதி சான்றிதழ் வைத்துள்ளீர்கள். ஏன் என்றால் அரசியல் காரணமாக இடஒதுக்கீடுகளின் காரணமாக அதைப் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் ஒருமுறை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகு நீங்கள் catholics அல்லது Protestants மட்டும் தான். நீங்கள் இந்து சாதி tag எடுத்துச் செல்ல முடியாது. கிறிஸ்தவத்தில் இதுபோன்ற சாதி இல்லை. ஆனால் வெவ்வேறு வடிவங்கள் உள்ளன. மதமாற்றம் என்பது அப்பாவி ஏழை மக்களுக்கு செய்யும் துரோகம் ஏமாற்றம்.

எப்படியும் வெளிநாடுகளில் இருந்து வரும் கிறிஸ்தவ நிதி அரசியல் கட்சிகளுக்காக மற்றும் தேர்தல் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எதுவும் மக்களை சென்றடையவில்லை. மதம் மாறிய இந்துக்கள் மட்டுமே முட்டாள்களாக மாறுகிறார்கள். தேர்தலின் போது சில அரசியல் செலவுகள் இப்படித்தான். இந்த பணம் மக்களுக்கு சொந்தமானது. இதனால்தான் சில அரசியல் கட்சிகள் கிறிஸ்தவத்தை நிதிக்காக ஊக்குவிக்கின்றன.

தலித் கிறிஸ்தவம் என்று எதுவும் இல்லை. கிறிஸ்தவத்தில் 9 வடிவங்கள் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் catholics அல்லது Protestants மாறுகிறார்கள். நீங்கள் இந்து தலித் சாதி சான்றிதழ் வைத்துள்ளீர்கள் ஏன் என்றால் அரசியல் காரணமாக இடஒதுக்கீடுகளின் காரணமாக அதைப் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் pic.twitter.com/il0nE4wKm8

— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R)

 

இதில் மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மதம் மாறாமல் இருந்தாலே அவர்களுக்கு இட ஒதுக்கீடு சரியான முறையில் கிடைக்கும். மதம் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையை மற்ற மதங்களுக்கு மாறாமலும் ஏமாறாமலும் செலுத்தலாம்’’என அவர் தெரிவித்துள்ளார்.

click me!