அமெரிக்கா சென்று வந்த விளம்பரத்திற்கு மட்டும் 88 லட்சம் செலவு செய்த கேடிஆர்.. அமைச்சர் நாசர் பகீர் புகார்.

By Ezhilarasan BabuFirst Published Aug 12, 2021, 3:39 PM IST
Highlights

முதற்கட்டமாக 8 சங்கங்களின் முறைகேடு தெடர்பான ஆவணங்கள் திரட்டப்பட்டும் வருகிறது. அவர்கள் மீது துறை ரீதியாக  நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்துளார்.

தமிழகத்தில் ஆவின் பால்விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் மூன்று மாதங்களில் 1.65 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளரிடம் தகவல் தெரிவித்த அமைச்சர் நாசர், ஆவின் பொருட்களை சர்வதேச அளவில் 8 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய போவதாகவும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் போட  இருப்பதாகவும், மாநில அளவில் தொலுங்கனா,ஆந்திராவிற்கு ஆவின் உப பொருட்கள் விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். 

அதிமுக முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமெரிக்க சென்று வந்ததற்கான விளம்பரம் மட்டும் 88 லட்சம் செலவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இதேபோல் பல கோடி ரூபாய் துறை ரீதியாக ஊழல் செய்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். தற்போது உள்ள 23 பால்வள கூட்டுறவுதுறை சங்கத்தில் 22 சங்கங்களும் பல்வேறு தரப்பில்  தலைவர் உட்பட அனைவரும் முறைகேடில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 8 சங்கங்களின் முறைகேடு தெடர்பான ஆவணங்கள் திரட்டப்பட்டும் வருகிறது. அவர்கள் மீது துறை ரீதியாக  நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்துளார்.

ஆவின் பால்விலை 3ரூபாய் குறைக்கப்பட்டதால் மூன்று மாதங்களில் 1.65 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஊழல் புகார் எழுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
 

click me!