தமிழிசைக்கு கட் அவுட்..! பொன்னாருக்கு கெட் அவுட்..! பாஜக மேலிடத்தின் அதிரடியால் கலங்கிய கமலாலயம்!

By Selva KathirFirst Published Jan 30, 2020, 10:31 AM IST
Highlights

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராகியுள்ள நிலையில் அவருக்கு முன்னதாக பாஜக தமிழக தலைவராக இருந்த பொன்னாரை கமலாலயத்தில் இருந்து வெளியேற்றியதன் பின்னணி தெரியவந்துள்ளது.
 

கடந்த 2011ம் ஆண்டு வாக்கில் தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் பொன் ராதாகிருஷ்ணன். அவரது தலைமயில் தான் 2014 நாடாளுமன்ற தேர்தலை தமிழக பாஜக எதிர்கொண்டது. கன்னியாகுமரியில் போட்டியிட்டு வென்ற பொன்னார், மத்திய இணை அமைச்சரானார். ஆனால் இந்த முறை அதே கன்னியாகுமரியில் போட்டியிட்டு பொன்னார் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராகியுள்ளார். பொன்னார் கன்னியாகுமரியில் தோல்வியை தழுவியது போல தமிழிசையும் தூத்துக்குடியில் தோல்வி அடைந்தார். ஆனால் தமிழிசைக்கு ஆளுநர் பதவி கொடுத்து அழகு பார்த்தது பாஜக மேலிடம். ஆனால் பொன்னாரை கண்டுகொள்ளவில்லை.

அதோடு மட்டும் அல்லாமல் கடந்த 2011ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவர் பயன்படுத்தி வந்த அறையையும் காலி செய்யுமாறு கூறியுள்ளது. இதனால் சுமார் 10 வருடங்களாக இருந்த அறையை காலி செய்துள்ளார் பொன்னார். எதற்காக பாஜக மேலிடம் இப்படி பொன்னாரிடம் கடுமை காட்டுகிறது என்று விசாரித்த போது, தமிழக பாஜக புதிய தலைவர் நியமனத்தில் பொன்னார் செய்யும் அரசியல் தான் காரணம் என்கிறார்கள். யாராவது ஒருவரை தலைவராக நியமிக்கலாம் என பாஜக மேலிடம் நினைத்தால் அதற்கு எதிராக ஏதாவது ஒன்றை கூறி தடுக்கும் லாபி நடைபெறுவதாகவும் அதன் பின்னணியில் பொன்னார் இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் மத்திய அமைச்சராக இருந்தும் நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியில் போட்டியிட்டும் தோல்வி அடைந்ததால் பொன்னார் மீது பெரிய அளவில் பாஜக மேலிடத்திற்கு அபிமானம் இல்லை என்று கூறுகிறார்கள். மேலும் பொன்னாருக்கு பதிலாக வேறு இளம் தலைவர் ஒருவரை கட்சியில் முன்னிலைப்படுத்தும் நிலைப்பாடாகவே பொன்னாரை கமலலாயத்தில் இருநது காலி செய்யச் சொல்லியிருக்கிறார்களாம். இதன் பின்னணியில் தமிழக பாஜகவில் ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட அந்த ஜாதி தலைவர்களின் லாபி இருப்பதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

click me!