பேமிலி மேன் 2 தொடருக்கு ஆப்பு ரெடி.. களத்தில் குதித்த தமிழக அரசு.. அமைச்சர் வெளியிட்ட தரமான சம்பவம்.

Published : Jun 07, 2021, 12:58 PM IST
பேமிலி மேன் 2 தொடருக்கு  ஆப்பு ரெடி.. களத்தில் குதித்த தமிழக அரசு.. அமைச்சர் வெளியிட்ட தரமான சம்பவம்.

சுருக்கம்

பேமிலி மேன் 2 தொடரில் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதால் அதனை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு  மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்தவுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.  

பேமிலி மேன் 2 தொடரில் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதால் அதனை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு  மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்தவுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், தகவல்தொழில்நுட்பத்துறை ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல், ELCOT நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டர்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், கொரோனா பரவல் மற்றும் மரணங்களை குறைக்க முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றும், மக்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இன்று ஒரே நாளில் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  இ- பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியதாக கூறிய அவர், இன்று மாலைக்குள் சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் எனவும், இ-பதிவு முறையில் தவறுகள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 

பேமிலி மேன் 2 தொடரில் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றம் சாட்டிய அவர்,  அதனை தடை செய்ய வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைபாடு என்றும், அதனால் தான் மத்திய அரசுக்கு வலியுறுத்தியதாகவும்,  மீண்டும் வலியுறுத்தப்படும் என்றும் கூறினார். பாரத் டெண்டர் விவகாரத்தில் ஒளிவு மறைவு இல்லாத வகையில் வெளிப்படைத்தன்மையோடு கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களின் நலன் எந்த சூழலிலும் பாதிக்கப்படாமல் அரசு பாதுகாக்கும் என கூறிய அவர், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை சிறந்த துறையாக முன்னேறி வரும் எனவும் கூறினார்.

பேமிலி மேன் 2 தொடரை தடை செய்யவேண்டும் என்று தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இல்லை என்றால், அமேசானை புறக்கணிப்போம் என்றும் அக்கட்சியினர் முழங்கி வருகின்றனர். இந்நிலையில்  தமிழக அரசும் பேமிலி மேன் 2 தொடரில் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அதன் காட்சிகள் உள்ளதால் அதனை தடை செய்ய வேண்டும் என தன் பங்கிற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதால், இந்த விவகாரம் அடுத்த நிலையை எட்டியுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் மட்டுமின்றி தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் இந்த தகவல் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி