நீட் தேர்வு மட்டுமின்றி மற்ற நுழைவுத் தேர்வுகளை அனுமதிக்கமாட்டோம்... அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்..!

By vinoth kumarFirst Published Jun 7, 2021, 12:52 PM IST
Highlights

பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகளை மட்டுமே நியமிக்கும் முடிவை எடுக்கவில்லை. பரிந்துரைகள் வந்திருப்பதால் இதுகுறித்து ஆலோசனை மட்டுமே செய்த் வருகிறோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகளை மட்டுமே நியமிக்கும் முடிவை எடுக்கவில்லை. பரிந்துரைகள் வந்திருப்பதால் இதுகுறித்து ஆலோசனை மட்டுமே செய்த் வருகிறோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிக்கான ஆன்லைன் வகுப்பிற்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சருடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ககர்லா உஷா, ஆணையர் நந்தக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி;- பல்வேறு வல்லுநர்களை கலந்து ஆலோசித்த பின்பே 12ம் வகுப்புதேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மதிப்பெண் முறை குறித்து விரைவில் முதல்வர் முடிவெடுப்பார்.  

நீட் தேர்வு நடத்தக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். நீட் தேர்வு மட்டுமின்றி மற்ற நுழைவுத் தேர்வுகளையும் தமிழக அரசு அனுமதிக்காது. தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகளை மட்டுமே நியமிக்கும் முடிவை எடுக்கவில்லை. பரிந்துரைகள் வந்திருப்பதால் இதுகுறித்து ஆலோசனை மட்டுமே செய்த் வருகிறோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புக்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தயாராக உள்ளது. நிர்வாக ரீதியாக பெண் ஆசிரியர் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து, சம்பந்தப்பட்ட பள்ளியே இந்த பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஏற்கனவே நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம்'' எனத் தெரிவித்தார். 

click me!