முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்க்கு மைக்மேனியா , மீடியா அலர்ஜி... ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் பகீர்..

By Ezhilarasan BabuFirst Published Jun 7, 2021, 12:27 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்க்கு மைக்மேனியா மற்றும் மீடியா அலர்ஜி இருப்பதால் தான் அவர் செய்தியாளர் சந்திப்பில் உலறி வருகிறார் எனவும், ஸ்டான்லி மருத்துவமனையில் கரும் பூஞ்சை நோய் சிகிச்சை பிரிவு உருவாக்கப்படும் என ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜட்ரீம் மூர்த்தி தெரிவித்துள்ளார்.  

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்க்கு மைக்மேனியா மற்றும் மீடியா அலர்ஜி இருப்பதால் தான் அவர் செய்தியாளர் சந்திப்பில் உலறி வருகிறார் எனவும், ஸ்டான்லி மருத்துவமனையில் கரும் பூஞ்சை நோய் சிகிச்சை பிரிவு உருவாக்கப்படும் என ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜட்ரீம் மூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று சென்னை ராயபுரத்தில் செந்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  

இந்த 3 மாதங்களில் ராயபுரம் தொகுதியில் கழிவுநீர்  பிரச்சனை முழுவதுமாக தீர்க்கப்படும்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் உலறி வருகிறார், அவர்க்கு ஒருவகை மீடியா அலர்ஜி மற்றும் மைக்மேனியா நோய் இருப்பதால் தான் முதல்வர் ஸ்டாலினை அவர் குற்றம்சாட்டி வருகிறார்.  என தெரிவித்தார். மேலும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் பிற முன்னாள் அமைச்சர்கள் முதல்வரை பாராட்டுகின்றனர், ஆனால் இவர் மட்டும் முதல்வரை குறை கூறி வருகிறார். 

அவர்கள் கட்சியிலுள்ள ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்யையேகூட குறை சொல்ல வேண்டியதுதானே என்று கூறினார். மேலும் பேசிய அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் கரும் பூஞ்சை நோய்க்கான சிகிச்சை பிரிவு உருவாக்கப்படும் எனவும், ராயபுரம் தொகுதியில் உள்ள கழிவுநீர் பிரச்சனை மூன்று மாதங்களில் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். தற்போதுவரை ஸ்டான்லி மருத்துவமனையில் 1000 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும், ராயபுரம் பகுதியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

 

click me!