தமிழகம் முழுவதும், முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 34 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. காவல்துறை

By Ezhilarasan BabuFirst Published Apr 19, 2021, 11:54 AM IST
Highlights

இந்நிலையில் , தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 34 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கடந்த 8 தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 4 லட்சத்து 03 ஆயிரத்து 262 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 34 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளது என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை நாட்டில் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது 19. 23 லட்சம் பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 1619 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1.44 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதை மீறிவோர் மீது அபராத தொகை வசூலுக்கு வருகிறது. மேலும் அரசு வகுத்த நெறி முறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டும் வருகிறது.  

இந்நிலையில் , தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 34 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கடந்த 8 தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 4 லட்சத்து 03 ஆயிரத்து 262 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நேற்று மட்டும் 867 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழகம் முழுவதும் 13 ஆயிரத்து 487 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 

 

click me!