ஒரு ஆண்டு முழுவதும் வாழ்வாதாரம் போச்சு.. மேலும் தடையா.? அரசுக்கு வரும் அதிரடி கோரிக்கைகள்..

By Ezhilarasan BabuFirst Published Apr 19, 2021, 11:31 AM IST
Highlights

50% இருக்கைகளுடன் திருமண நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், தனியார் சமுக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தென்னிந்திய ஒலி ஒளி அமைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மாநகர ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  

50% இருக்கைகளுடன் திருமண நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், தனியார் சமுக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தென்னிந்திய ஒலி ஒளி அமைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மாநகர ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வந்த காரணத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது, குறிப்பாக திருவிழாக்கள் நடத்த தடையும், திருமண நிகழ்ச்சிகளில் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 100 பேர் மட்டுமே பங்கேற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

50% இருக்கைகளுடன் திருமண நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், தனியார் சமுக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தென்னிந்திய ஒலி ஒளி அமைப்பாளர்கள் சங்கத்தினர் சென்னை மாநகர ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்: தமிழகத்தில் திரையரங்கு மற்றும் தொழில் செய்யும் அரசு நிறுவனங்களுக்கு 50% சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஏற்கனவே கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் மேடை மெல்லிசை நிகழ்ச்சி நடத்துகின்ற இசைக்கலைஞர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் மிகவும் பாதித்துள்ளது.

இதனால் ஒரு ஆண்டு காலமாக வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதித்து உள்ளது இதனால் பணியாற்றும் ஊழியர்களுக்கான சரியான ஊதியத்தையும் எங்களால் வழங்க முடியவில்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு எங்களுக்கான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தெரிவித்தனர்.
 
 

click me!