விரக்தியின் உச்சத்தில் ஏசி சண்முகம்... தேர்தலில் நிற்கும் ஆசையே போய்விட்டதாம்!

By sathish kFirst Published Apr 17, 2019, 6:35 PM IST
Highlights

வேலூரில் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தலையிட முடியாது, தேர்தலை நிறுத்தியது நிறுத்தியது தான் என கதவைத் தட்டிய ஏசி சண்முகத்தின் மனுவை தள்ளுபடி சேது அனுப்பியதால், இனி தேர்தலில் நிற்கும் எண்ணத்தையே கைவிடும் முடிவுக்கு வந்துள்ளாராம் அதிமுக கூட்டணியின் பணக்கார வேட்பாளரான ஏசி சண்முகம்.    

வேலூரில் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தலையிட முடியாது, தேர்தலை நிறுத்தியது நிறுத்தியது தான் என கதவைத் தட்டிய ஏசி சண்முகத்தின் மனுவை தள்ளுபடி சேது அனுப்பியதால், இனி தேர்தலில் நிற்கும் எண்ணத்தையே கைவிடும் முடிவுக்கு வந்துள்ளாராம் அதிமுக கூட்டணியின் பணக்கார வேட்பாளரான ஏசி சண்முகம்.    

வேலூர் தொகுதியில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி, தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இந்த பரித்துரையை ஏற்று நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். 

ஒருபக்கம், தேர்தல் ரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தார் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த். இன்னொருபக்கம் இந்த தேர்தல் ரத்தால் பலகோடியை இழந்து தவிக்கும் அதிமுக வேட்பாளரான ஏசி சண்முகம்,  திட்டமிட்டபடி நாளை வேலூரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சற்று முன்பாக அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. இதை அவசரவழக்காக எடுத்து விசாரித்ததில், வாக்குவாதம் செய்த ஏசி சண்முகம் தரப்பு பணப்பட்டுவாடாவுக்காக தேர்தலை நிறுத்தக் கூடாது என்றும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்களை தகுதி நீக்கம் செய்யலாம்  கதரக் கதற வாதிட்டது. ஆனால் நீதிபதியே, , வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளையே தகுதி நீக்கம் செய்ய முடியும் என்றும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும், தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தலையிட முடியாது என்றும்,  ஏசி சண்முகம் உள்ளிட்டோர் வேலூர் தேர்தல் ரத்துக்கு எதிராக தொடர்ந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

கடந்த முறை 50 கோடி ரூபாய் வரை செலவு செய்து தோற்ற நிலையில், பலமான கூட்டணியில்  சுமார் 100 கோடி வரை செலவு செய்துள்ளார். அதாவது ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் என பண விநியோகம் செய்துள்ளனர். இப்படி துரைமுருகனும் அவரது மகனும் செய்து வைத்தவேலையால் 100 கோடி பணம் என மொத்தமாக பறிபோன சோகத்தில் இருக்கிறாராம் ஏசி சண்முகம். ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்த மனுஷன், எம்பி ஆகும் ஆசையில், வேகாத வெய்யிலில் தலையில் குல்லா கூட போடாமல் பிரசார வாகனத்தில் நின்றுகொண்டு சுற்றி சுற்றி ஓட்டு கேட்டும், சுமார் 100 கோடிக்கு மேல் செலவு செய்தும் ஒரு புரியோஜனமும் இல்லாமல் ஆக்கிய துரைமுருகன் மற்றும் கதிர்ஆனந்த் மீது செம்ம காண்டில் இருக்கிறாராம் ஏசி சண்முகம்.

பணபலம், சொந்த செல்வாக்கு, கூட்டணி கட்சிகளின் வாக்குவங்கி, ரஜினியின் மறைமுக ஆதரவு என பலம் பொருந்தி எப்படியும் ஜெயித்துவிடுவோம் என கனவில் இருந்த ஏசி சண்முகத்துக்கு தேர்தல் ரத்தம், கோர்ட்டின் அதிரடி தீர்ப்பும்  தேர்தலில் நிற்கும் ஆசையே போய்விட்டதாம். 

click me!