மோடிக்கு தமிழ்நாடு மேல அளவு கடந்த பாசம்..! புகழ்ந்து தள்ளும் அரசியல் தலைவர்..!

By Manikandan S R SFirst Published Oct 11, 2019, 4:49 PM IST
Highlights

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் மாமல்லபுரம் சந்திப்புக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றும் நாளையும் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இருக்கின்றனர். இரு நாட்டு நல்லுறவு தொடர்பாக முக்கிய உரையாடல்கள் நடைபெற இருக்கின்றன. இதற்காக சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.

உலகின் கவனத்தை மொத்தமாக ஈர்த்துள்ள மாமல்லபுரம் சந்திப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவிற்கு சீன அதிபரை அழைத்த பிரதமர், அவரை மாமல்லபுரத்தில் தான் சந்திக்க வேண்டும் என்று இடத்தை முடிவு செய்ததன் காரணம், அவர் தமிழகத்தின் பாரம்பரியம், பழமை மீது கொண்ட அளவு கடந்த பாசமே ஆகும்.

உலகமே தமிழகத்தை அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்களும் உற்றுநோக்க வைத்துவிட்டார் பிரதமர் மோடி. இந்த இரு பெரும் தலைவர்களின் சந்திப்பு மாபெரும் வெற்றியடைய தமிழக மக்கள் சார்பாகவும், புதிய நீதிக்கட்சி சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

click me!