பிரதமர் மோடிக்கு கோயில்...!! இஸ்லாமிய பெண்கள் சொந்த செலவில் கட்டுகின்றனர்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 11, 2019, 4:22 PM IST
Highlights

பிரதமரை  இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்பது போன்று சித்தரிக்க சிலர் முயற்சி செய்கின்றன. அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாகத்தான் நாங்களே இப்போது அவருக்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளோம் என்கின்றனர்.  எப்போதும் இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவும்  மோடிக்குதான் என்றனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களின் சொந்த செலவில், பிரதமர் மோடிக்கு கோயில் கட்டும்பணியில் இறங்கியுள்ளனர். 

முத்தலாக் தடை சட்டம் கொண்டுவரப்பட்டதை வரவேற்கும் விதமாக, ஏற்கனவே பிரதமர் மோடிக்கு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் ரக்ஷா பந்தனுக்கு, ராக்கி அனுப்பிவைத்து ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்தனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச  மாநிலம் முசாபர் நகரில் மோடிக்கு கோயில் கட்டும் பணியில் அங்குள்ள இஸ்லாமிய பெண்கள் இறங்கியுள்ளனர்.  இதற்காக குழு ஒன்றை ஆரம்பித்துள்ள அவர்கள் தங்கள் சொந்த பணத்தில்  கோயில் காட்டவும்  முடிவு செய்துள்ளனர்.  இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள அப்பெண்கள்,   இஸ்லாமிய பெண்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையில் புது நம்பிக்கையை தெம்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு,  இலவச வீடுகள் கட்டித்தரும் திட்டம்,  என பல்வேறு திட்டங்களை மோடி செயல்படுத்திவருகிறார். அவரின் செயல்கள் அனைத்தும் பாராட்டத்தக்கதாக உள்ளது.  அவர் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களுக்கு  எப்போதும் எங்களுடைய ஆதரவு உண்டு, பிரதமரை  இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்பது போன்று சித்தரிக்க சிலர் முயற்சி செய்கின்றன. அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாகத்தான் நாங்களே இப்போது அவருக்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளோம் என்கின்றனர்.  எப்போதும் இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவும்  மோடிக்குதான் என்றனர். மோடிக்கு  கோயில் கட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.  தற்போது கோவில் கட்டுவதற்கான ஆரம்ப பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
 

click me!