#GoBackModi ... அமெரிக்கா - இங்கிலாந்து சதி... அதிர்ச்சி பின்னணி..!

By Thiraviaraj RMFirst Published Oct 11, 2019, 3:30 PM IST
Highlights

வெறும் 22 சதவிகித ட்வீட்டுகள் மட்டுமே இந்தியாவில் இருந்து பதியப்பட்டது என்பதும் அம்பலமாகியுள்ளது. இந்த 22 சதவிகித ட்வீட்களிலும் தமிழகத்தில் இருந்து பதியப்பட்ட ட்வீட்டுகள் மிகவும் சொற்பம் எனத் தெரிய வந்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி  ட்ரெண்டாக்குவது வழக்கம். 

அதில் பிரதமரின் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில்  ட்வீட்டுகளை பதிந்து எதிர்ப்பை காட்டுவார்கள்.  இது எந்த எதிர் தாக்கத்தையும் ஏற்படுத்தாததால், பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் இருந்து இந்த ஹேஷ்டேக்கில் ட்வீட்டுகளை பதிய வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்றும் பிரதமரின் தமிழக வருகையை ஒட்டி #GoBackModi ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. ஆனால் இந்த ட்ரெண்டில் பதியப்பட்ட 59 சதவிகித ட்வீட்டுகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருந்தும், 15 சதவிகித ட்வீட்டுகள் அரபு நாடுகளில் இருந்து பதியப்பட்டது என்றும், வெறும் 22 சதவிகித ட்வீட்டுகள் மட்டுமே இந்தியாவில் இருந்து பதியப்பட்டது என்பதும் அம்பலமாகியுள்ளது. இந்த 22 சதவிகித ட்வீட்களிலும் தமிழகத்தில் இருந்து பதியப்பட்ட ட்வீட்டுகள் மிகவும் சொற்பம் எனத் தெரிய வந்துள்ளது. 

Again Musim and anti social elements contributing a lot for "GoBackTrend"

*Only 22% are from Indian Anti Indians( )
*59% from Latin america and UK
*15% from Middle east pic.twitter.com/vEh40WsY7Y

— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar)

 

இதுகுறித்த தகவலை பா.ஜ.க தமிழக ஐடிவிங்  தலைவர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 

click me!