அதிமுக உட்கட்சி தேர்தல்.. விரைவில் அறிவிப்பு?ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே முரண்பாடு களையுமா?

By vinoth kumarFirst Published Nov 5, 2021, 5:40 PM IST
Highlights

குறிப்பாக சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கூறியதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அதிமுக தலைமை கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்கட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக பொதுக்குழு வருடத்திற்கு ஒரு முறையும், செயற்குழு 2 முறையும் நடத்தப்பட வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கால அவகாசமும்  கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதற்கு முன்னதாக உட்கட்சி தேர்தலை  நடத்தி முடிக்க வேண்டும் என அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க;- வெட்கமா இல்ல.. என் புருஷனுக்கு நீ ஏண்டி இப்படி அலையறே? வீட்டுக்கு வந்த தோழியால் ரோட்டுக்கு வந்த குடும்பம்.!

அதிமுக உள்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். 2014-ம் ஆண்டு ஜெயலலிதா இருந்த போது அதிமுக உள்கட்சி தேர்தலை நடத்தினார். அதன் பிறகு 2019-ம் ஆண்டு உள்கட்சி தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். அதிமுக உள்கட்சி தேர்தலை நடத்த முயற்சி செய்யும் போதெல்லாம் ஒவ்வொரு பிரச்சனை ஏற்பட்டது. ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டது, சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சிமன்ற தேர்தல், கொரோனா காலகட்ட ஊரடங்கு, அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு என பல்வேறு வி‌ஷயங்கள் காரணமாக உள்கட்சி தேர்தல் நடைபெறுவது காலதாமதமாகிக் கொண்டே சென்றது.

இதையும் படிங்க;- எங்களுக்கு வெட்டிய குழியில் நாங்கள் மட்டும் விழப்போதில்லை.. நீங்களும் விழப்போகிறீர்கள்.. எச்சரிக்கும் ராமதாஸ்

இந்நிலையில் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால், வருகிற 10ம் தேதிக்கு பிறகு அதிமுகவில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கூறியதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- திருமண வீடு சாவு வீடாக மாறிய சோகம்.. மினி பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு.!

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைக் கழகத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சசிகலா விவகாரத்தில் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில் உட்கட்சி தேர்தல் நடைபெற இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

click me!