இது நவீன தீண்டாமை.. முதல்மைச்சர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. போட்டு பொளக்கும் எல்.முருகன்.

By Ezhilarasan BabuFirst Published Nov 5, 2021, 4:29 PM IST
Highlights

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறாதது ஒரு விதமான நவீன தீண்டாமை என்றும் அதை வன்மையாக கண்டிப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துக் கூறாதது ஒருவித நவீன தீண்டாமை என்றும், உடனே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர்கள் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர்  தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என ஏற்கனவே எல் .முருகன் வலியுறுத்தியிருந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ள முக்கிய திட்டங்கள் பெரும்பாலான மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை போன்ற அறிவிப்புகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் அரசு கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தமிழக பாஜக விமர்ச்த்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், திமுகவுக்கு சரியான எதிர்க்கட்சி பாஜகதான் என்ற  பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் வெளிப்பாடாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் புகார் முன்வைத்து வருகிறார். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவரது பங்குக்கு தொடர்ந்து தமிழக முதலமைச்சரை தாக்கியும் விமர்சித்தும் பேசி வருகிறார். இன்று காலை, மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டுமென முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதை மேற்கோள் காட்டிய எல். முருகன்  முதல்வரை கடுமையாக விமர்சித்திருந்தார். 

அதாவது, மத்திய அரசு தேவையான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கிய பின்னரும், முதலமைச்சர் நிதியை விடுவிக்க வேண்டுமென பிரதமருக்கு கடிதம் எழுதி மக்களை குழப்பும் நாடகத்தை நடத்துகிறார் என்றும் அது கேலிக்குரியது என்றும் கடுமையாக தாக்கி இருந்தார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முதலமைச்சர் கட்டாயம் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும், அவர் வாழ்த்து தெரிவிக்க ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார் என்றும் நேற்று அவர் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் எல்.முருகன், அண்ணாமலை உட்பட பாஜகவினர் எவ்வளவு கோரிக்கை வைத்தும்  முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணியை சேர்ந்த ஒரு சில தலைவர்கள் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறவில்லை, இது பாகவினரை கொதிப்படைய வைத்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. முதலமைச்சர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறாதது குறித்து பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் முதல்வரை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து கூறாதது ஒரு விதமான நவீன தீண்டாமை என்றும் அதை வன்மையாக கண்டிப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். அதாவது, இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க ஆலயங்களில் பாஜக நிர்வாகிகளால் உலக மக்களின் ஒற்றுமைக்காக இன்று சிறப்பு  பூஜை நடைபெற்றது, அந்த வரிசையில் கேதார்நாத்தில் ஆலயத்தில் முதல்வர் மோடி கலந்து கொள்ளும் சிறப்பு பூஜை காணொலிக் காட்சி மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் அந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தீபாவளி பண்டிகைக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது கண்டனத்துக்குரியது, இது ஒரு நவீன தீண்டாமையாக பார்க்கிறேன், தற்போது ராமேஸ்வரம் என்ற இந்த புண்ணிய தலத்தில் இருந்து நான் சொல்கிறேன், நேற்று இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கிற இந்துக்கள், தமிழர்கள் தீபாவளி பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளனர். 

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்கான தீபாவளியை கொண்டாடுகிறோம், இதை ஒவ்வொரு தமிழரும் கொண்டாடியுள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட தீபாவளிக்கு முதலமைச்சர் வாழ்த்து கூறாதது கண்டிக்கத்தக்கது. ஒரு பெரும்பான்மையான மதத்தினருக்கு அவர் வாழ்த்து கூறாதது ஓரவஞ்சனை, பெரும்பான்மையான இந்து சமுதாயம் கொண்டாடுகின்ற பண்டிகையை தமிழர்கள் கொண்டாடுகின்ற பண்டிகைக்கு வாத்து கூறாமல் அவர் புறக்கணித்திருப்பது நவீன தீண்டாமையின் உச்சம். ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். 
 

click me!