தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு.. ஸ்டாலினை கழுவி கழுவி ஊற்றிய எடப்பாடி பழனிச்சாமி.

By Ezhilarasan BabuFirst Published Jun 21, 2021, 2:07 PM IST
Highlights

தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு என்பதுதான் தற்போதைய நிலைமையாக உள்ளது, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என வாக்குறுதி கொடுத்து அறிவிப்பு விடுத்தனர்,  

அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது, அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன, கூட்டத்திற்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்றைய ஆளுநர் உரையில் அரசின் முன்னோடி திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது, திமுக ஆட்சி அமைந்த உடன் 550 வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று கூட ஆளுநர் உரையில் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. 

திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து விட்டு இன்று அதை பற்றி விசாரிக்க குழு அமைக்க பட்டிருக்கிறது. ஆனால் தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்தின் போதும் நீட் தேர்வு ரத்து என்று சொல்லி விட்டு, இப்போது குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு,தேர்வு வந்ததற்கு பின்பு ஒரு பேச்சினை பேசி வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்து 45 நாட்கள் ஆகிறது, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் ரத்து பத்திரம் வழங்க பட வில்லை, மாணவர்கள் வாங்கிய கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர், அது குறித்தும் ஆளுநர் உரையில் தகவல் இல்லை.

தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு என்பதுதான் தற்போதைய நிலைமையாக உள்ளது, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என வாக்குறுதி கொடுத்து அறிவிப்பு விடுத்தனர், அந்த அறிவிப்பு குறித்தும் ஆளுநர் உரையில் தகவல் இல்லை, குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்த அறிவிப்பு குறித்தும் ஆளுநர் உரையில் தகவல் இல்லை, நோய் தொற்றை கட்டுபடுத்த அரசு தவறி விட்டது. இதன் காரணமாக விலை மதிப்பில்லாத பல உயிர்கள் இழக்க பட்டிருக்கிறது, அதே போல rt pcr சோதனைகளை மேற்கொள்வதில் குளறுபடிகள் நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.  

 

click me!