கமல், சீமான் கூட்டணி... சசிகலா முதலில் அரசியலுக்கு வரட்டும்.. கருணாஸ் தாறுமாறு..

By Ezhilarasan BabuFirst Published Jun 21, 2021, 1:43 PM IST
Highlights

"அவரால் உருவாக்கப்பட கல்லூரிகளில் படித்தவர்களில் நானும் ஒருவன், அவரின் வீட்டில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் சந்தித்தேன். அவர் கோவை தெற்கு தொகுதியில் தோல்வியுற்றது தமிழ் மக்களுக்கு கவலையை தந்துள்ளது.
 

கமல் மற்றும் சீமான் கூட்டணி வைத்தால் மாபெரும் சக்தியாக இருக்கும் எனவும். சசிகலா முதலில் அரசியலுக்கு வரட்டும் அதற்கு பின்னர் அவர் குறித்து பேசலாம் எனவும் செய்தியாளரின் கேள்விக்கு முக்குலத்தோர் புலிப்படை  தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.  மக்கள் நீதி மய்யத்தின்  தலைவர் கமல் ஹாசனை மரியாதை நிமித்தமாக  ஆழ்வார்பேட்டையில்  உள்ள அவரது அலுவலகத்தில் கருணாஸ் இன்று சந்தித்தார்.சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து கருணாஸ், 

அவரால் உருவாக்கப்பட கல்லூரிகளில் படித்தவர்களில் நானும் ஒருவன், அவரின் வீட்டில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் சந்தித்தேன்.அவர் கோவை தெற்கு தொகுதியில் தோல்வியுற்றது தமிழ் மக்களுக்கு கவலையை தந்துள்ளது. கமல் மற்றும் சீமான் கூட்டணி வைத்தால் மாபெரும் சக்தியாக இருக்கும். நான் சொல்லுவதை அனைத்தும் அவர் கேட்டார், அதைக் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் நாளை, அல்லது  நாளை மறுநாள் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் ஆலோசனை நடத்துவதாக கூறினார். உங்கள் மீது மக்கள் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு மக்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று நான் கூறினேன்.  பணம் கொடுக்காமல் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றவர் கமல்ஹாசன். நல்ல விஷயத்தை செய்பவர்களுடன் இணைந்து செயல்படுவது தான் நல்லது.

வரக்கூடிய காலத்தில் யார் மக்களின் நலனுக்காக பாடுபடுவார்களோ அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றார். கொரோனா காலமென்பதால் இட ஒதுக்கீட்டு செயல்பாடுகளை தற்போது வரை நிறுத்தி வைத்துள்ளோம். மேலும் இடஒதுக்கீடு குறித்து இந்த திமுக அரசிடம் வலியுறுத்துவோம். மேலும் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  நடை பயணம் மேற்கொள்வோம் "சாதி பற்றும் பிற சாதி நட்பும்" இருந்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம் என்றார். ச சிகலா குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முதலில் சசிகலா அரசியலுக்கு வரட்டும் அதற்கு பின்னர் அவர் குறித்து பேசலாம் என  தெரிவித்தார்.
 

click me!