ஒரே ஒரு "டயலாக்"...! 7 பேருக்கு "அல்வா" கொடுத்த சுவாரசியம்...! யார் இவர் ?

First Published Jan 17, 2018, 1:23 PM IST
Highlights
a single man married 7 womens


‘இரண்டாவது திருமணம்’ என்ற பெயரில் பல பெண்களை ஏமாற்றி, பாலியல் லீலைகளையும் , கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு 57 வயாதான கல்யாண மன்னனின் காம லீலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்த 57 வயதான  புருஷோத்தமன். ‘இரண்டாவது திருமணம்’ என்கிற பெயரில் பல பெண்களை ஏமாற்றி, தனது காம லீலைகளை நடத்திவிட்டு அவர்களிடமே கோடிக்கணக்கில் பணத்தை அபேஸ் பண்ணிவிட்டு தலைமறைவாக வாழும் கல்யாண மன்னனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த வழக்கை விசாரித்துவரும் புலியகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது. கல்யாண மன்னன் புருஷோத்தமன் 78 வயதாகும் தன் அம்மா கமலம் மற்றும் கல்லூரியில் படிக்கும் மகள் கீதாஞ்சலி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். ‘இதுவரை ‘புருஷோத்தமனால் எட்டு பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்களாம். இது வரை விசாரித்ததில் கிடைத்த தகவல் தானாம்  இன்னும் பல பெண்கள் எமார்ந்திருக்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்களாம்.

பணத்தையும் கர்ப்பையும் இழந்த பெண்கள்...

கோவை வெள்ளலூரைச் சேர்ந்த விமலா பள்ளி ஆசிரியை...

சென்னையைச் சேர்ந்த இந்திரா காந்தி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியை...,

கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாந்தினி,

ஈரோட்டைச் சேர்ந்த சித்ரா,

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த குமுதவல்லி மற்றும் சுசீலா

என ஒரு லிஸ்ட் போடலாம்... இவர்களில் இதுவரை குமுதவல்லி, இந்திரா காந்தி, சாந்தினி மட்டுமே புகார் கொடுத்துள்ளார்களாம். குமுதவல்லியின் கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். மற்ற ஐந்து பெண்களும், கணவரிடமிருந்து பிரிந்தவர்கள். இவர்களில் சில பெண்களுக்கு, திருமண வயதில் பிள்ளைகள் இருக்கிறார்களாம். அதனால், போலிஸ் விசாரணை என வர தயங்குகிறார்களாம்.

கல்யாண மன்னன் இரண்டாவது திருமணம் செய்ய ப்ளான் போட்டதற்கு முன்பே புருஷோத்தமனுக்கும் உஷாராணிக்கும் பிறந்தவர் கீதாஞ்சலி, உஷாராணி இறந்துவிட்டார் என சொல்கிறார்கள்.  அதற்க்கும் முன்னதாக சபீதா என்ற பெண்ணைத் திருமணம் தனது பாலியல் இச்சையை தீர்த்துவிட்டு கழட்டு விட்டுட்டாராம் இந்த கல்யாண மன்னன். 

அதெப்படி இத்தனை பெண்கள் தொடர்பு எப்படி கிடைத்தது? கோவை காந்திபுரத்தில் உள்ள ‘மெட்டி ஒலி’ திருமணத்தகவல் மையத்தின் உரிமையாளர் புருஷோத்தமனுக்கு இரண்டாம் திருமணத்துக்குப் பெண் பார்த்துக் கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல புரோக்கர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அவர்களே, இரண்டு திருமணங்களையும் நடத்தி வைத்துள்ளனர். சாந்தினியைத் திருமணம் செய்துவைத்த ஒரே மாதத்தில், குமுதவல்லியையும் திருமணம் செய்துவைத்துள்ளனர். கல்லூரி பேராசிரியை இந்திரா காந்தியை கனைக்சன் கொடுத்ததும் இதே  ‘மெட்டி ஒலி’கேங் தானாம்.

தொடர்பை பலப்படுத்தி பணத்தை பறித்தது எப்படி? ‘மெட்டி ஒலி’ திருமணத் தகவல் மையத்திற்கு வரும் 40 வயதுக்கு மேற்பட்ட பணக்கார விதவைப் பெண்கள், கணவரைப் பிரிந்த பெண்களின் போன் நம்பர்களை புருஷோத்தமன் வாங்கி வைத்துக்கொண்டு. அந்த பெண்களிடம் ‘நான் ஒரு பெரிய பிசினஸ்மேன்’, ‘கல்யாணம் ஆன ஒரு வருஷத்துல என் பொண்டாட்டி செத்துட்டா. இப்போ, என் பொண்ணுக்கு கல்யாண வயசாகிடுச்சி. அம்மாவுக்கும் உடம்புக்கு முடியல. இதனால் நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நீங்களும் என்னை மாதிரிதானே  இருக்கீங்க. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும் யோசிச்சு சொல்லுங்க. எங்க வீட்டுக்கு வந்து பாருங்க... பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லைனா ஃப்ரெண்ட்ஸாவே இருக்கலாம் என ஸ்மூத்தா பேசி வீட்டுக்கு வரவழித்து. அவர் சொன்னதைப்போலவே வயதான அம்மா, மகள் என இருப்பதால் அவர்களும் முழுசாக நம்பி விடுவார்களாம். அதுமட்டுமல்ல, தன் மகளை, ‘நீங்க பாக்குறதுக்கு என் அம்மா மாதிரியே இருக்கீங்க’ என இன்னொரு பிட்டையும் போட வைப்பாராம்.

இப்பட ஏமார்ந்து போன பெண்ணின் வீட்டுக்கு வாரம் வாரம் போவது, என அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து தனது பாலியல் லீலையை அரங்கேற்றி விடுவாராம். 

கல்லூரி பேராசிரியை கல்யாண வலையில் சிக்கியது எப்படி?

இந்திரா காந்திக்கு 16 வயதிலேயே முதல் திருமணம் நடந்திருக்கிறது. சில பல குடும்ப  சூழலால் கணவரை பிரிந்து, சென்னையில் வசிக்கும் இவர் கணவரை பிரிந்த சில  நாட்களிலேயே. உறவினர்களின் தொல்லையால், கோவைக்கு வந்து ‘மெட்டி ஒலி’ திருமணத் தகவல் மையத்தில் பதிவுசெய்திருக்கிறார்.  வழக்கம் போல கல்யாண மன்னன் தன் கல்யாண லீலையில் விழவைத்துள்ளார். அதுமட்டுமல்ல, தன் மகளை இந்திரா காந்தியின் வீட்டுக்கு அனுப்பி, ஒரே குடும்பம்போல உறவாடியுள்ளார்.

பணத்தை ஆட்டையை போட்டது எப்படி? கல்யாண வலையில் விழுந்ததை அடுத்து, ‘எனக்கு ஓர் இடத்தில் 17 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது. ஆனால், அதற்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிறது’ என அழுது  புலம்பியிருக்கிறார். கல்யாண மன்னனில் இந்த பாசாங்கை புரிந்து கொள்ளாத இந்த பேராசிரியை  தன் வீட்டை அடமானம் வைத்து ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். பணம் வாங்கிய சில நாட்களில் பாய் சொல்லாமல் கூட போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.

இதனையடுத்து, கணவரைப் இழந்த குமுதவல்லியிடமும் பாசாங்காக பேசி,  ரூபாய் மூன்றரைக் கோடியை  அபேஸ் செய்துள்ளார்.

இதில் என்ன கொடுமைன்னா? இந்த கல்யாண மன்னன், ஒரு பெண்ணுடன் ஒரு மாதத்துக்கு மேல் இருந்ததில்லை. நைசாக பேசி, தனது காம விளையாட்டை அரங்கேற்றிவிட்டு, பணத்தையும் ஆட்டையை போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவது  இந்த கல்யாண மன்னனுக்கு கைவந்த கலை.

click me!