தேர்தல் நடந்தால் வெற்றி இவருக்கு தானாம்...! பகீர் கருத்துக்கணிப்பு..!

 
Published : Jan 17, 2018, 01:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
தேர்தல் நடந்தால் வெற்றி இவருக்கு  தானாம்...! பகீர் கருத்துக்கணிப்பு..!

சுருக்கம்

dmk will win in next election said survey

தமிழகத்தில் அடுத்து தேர்தல் நடந்தால்,வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

இது குறித்து பிரபல நாளிதழ் மேற்கொண்ட கருத்து கணிப்பில், திமுக மெஜாரிட்டி பெற்று வெற்றி பெரும் என்றும், அதிமுக தோல்வியை தழுவும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,தற்போது புதியதாக அரசியலில் கால் பதிந்து உள்ள, நடிகர் ரஜினி காந்த், 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக,வாக்கு சிதைவு ஏற்படும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகணிப்பின் படி,

திமுக - 130 தொகுதி

அதிமுக - 68 தொகுதி

ரஜினி தலைமையில் - 33 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும்,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அதிமுக  ஆட்சியில் பெரும் வெற்றிடம் காணப்படுவதாக மக்கள் கருத்து கணிப்பில் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், டிடிவி தினகரனும் புதிய கட்சி தொடாங்க உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.

எனவே வரும் தேர்தலில்,வெற்றி பெற்ற தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற போகும் கட்சி எது என எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு