திருமாவளவனுக்கு ஒரே வருத்தமாம்...! காரணம் பா. வளர்மதிதானாம்...!

 
Published : Jan 17, 2018, 12:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
திருமாவளவனுக்கு ஒரே வருத்தமாம்...! காரணம் பா. வளர்மதிதானாம்...!

சுருக்கம்

Thirumavalavan said that Periyar awarded to former Minister valarmathi

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது அளித்தது வேதனை அளிக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாய உணர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும். 

அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டிற்கான விருதுகள் யார் யாருக்கென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். 

இதில் பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கே.ஜீவபாரதிக்கும் அறிவிக்கப்பட்டது. 

இந்த விருதுகளை நேற்று சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி கவுரவித்தார். 

விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது அளித்தது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!