புது கட்சியா? நானா? - ஜகா வாங்கிய டிடிவி...! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள் கூட்டம்..! 

 
Published : Jan 17, 2018, 11:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
புது கட்சியா? நானா? - ஜகா வாங்கிய டிடிவி...! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள் கூட்டம்..! 

சுருக்கம்

TDV also said that it should restore the AIADMK.

தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை எனவும் அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் எனவும் டிடிவி தெரிவித்துள்ளார். 

அதிமுகவை கைப்பற்றப்போவதாக கூறிவந்த டிடிவி.தினகரன், திடீரென தனிக்கட்சி தொடங்கப்போவதாக தெரிவித்திருந்தார். 

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை நீக்க சட்டரீதியான போராட்டம் தொடர்வதாகவும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக காலமதாமதம் ஆகும் என்பதால் அதற்கு முன்னதாக வரவுள்ள உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்ள வசதியாக தனிக்கட்சி குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.  

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதாகவும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு தனிக்கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். 

மேலும் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் தங்களின் பின்னால் உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இந்நிலையில் நீலகிரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், இரட்டை இலையையும் கட்சியையும் நீதிமன்றம் சென்று மீட்போம் எனவும் தெரிவித்தார். 

மேலும் புதிக கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை எனவும் குறிப்பிட்டார். 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!