
ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஆண்ட போது தமிழகத்தில் தேர்தல் காலங்களில் மட்டும்தான் சர்வேக்கள் நடக்கும். ஆனால் என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை, எடப்பாடி அரசில் வாராவாரம் சர்வே நடத்தப்படுகிறது.
அதில் முதல் கேள்வியாக இந்த அரசின் ஆயுட்காலத்தை பற்றி கேட்கப்படுவது கவனிக்கத்தக்கதாக போயுள்ளது! அந்த வகையில் பிரபல வாரப்பத்திரிக்கை ஒன்று தற்போது எடப்பாடி, தினகரன், ரஜினி ஆகியோரை மைய்யமாக வைத்து சர்வே ஒன்றை நடத்தியுள்ளது.
அதன் ரிசல்டுகள் இப்படியாக விரிகின்றன...
* அ.திமு.க.வின் அரசு எவ்வளவு நாள் நீடிக்கும்? என்ற கேள்விக்கு முப்பத்து ரெண்டு சதவீத மக்கள் 3 மாதங்கள் ! என்றும், முப்பத்தைந்து சதவீத மக்கள் 6 மாதங்கள்! என்றும், முப்பத்து ரெண்டரை சதவீத மக்கள் முழு ஆட்சி! என்றும் பதில் தந்துள்ளனர்.
* தினகரன், அ.தி.மு.க.வை கைப்பற்றுவாரா? என்கிற கேள்விக்கு நாற்பதரை சதவீத மக்கள் வாய்ப்பே இல்லை என்றும், ஆட்சி கவிழ்ந்தால் கைப்பற்றுவார் என முப்பது சதவீத மக்களும், புதுக்கட்சி துவங்குவார் என பதினெட்டரை சதவீத மக்களும், வழக்குகளால் தினகரனுக்கு பாதிப்பு வரும் என பதினோறு சதவீத மக்களும் பதில் தந்துள்ளனர்.
* நாடாளுமன்றத்தேர்தலின் வெற்றிக் கூட்டணியாக...தி.மு.க - காங்கிரஸை ஐம்பத்தைந்து சதவீத மக்கள் சுட்டியுள்ளனர். தி.மு.க.- பி.ஜே.பி. கூட்டணியை பனிரெண்டரை சதவீதம் பேரும், அ.தி.மு.க. - காங்கிரஸை வெறும் எட்டரை சதவீத மக்களும், அ.தி.மு.க - பி.ஜே.பி.யை பதினாறு சதவீதத்தினரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
* வரும் காலத்தில் சிறந்த முதல்வராக யார் இருப்பர்? என்பதற்கு முப்பத்தெட்டு சதவீதத்தினர் ‘மு.க. ஸ்டாலின்’ என்றும் கொடி தூக்கி காட்டியுள்ளனர். டி.டி.வி. தினகரன் என்று பதினாலு சதவீதத்தினர் கூறியிருக்க, ரஜினியை பதினேழரை சதவீதத்தினரும் சொல்லியிருக்கின்றனர். ஆளும் எடப்பாடியை வெறும் ஏழு சதவீதத்தினர் ‘சிறந்த முதல்வர்’ என்று சொல்லியிருக்க, விஜயகாந்தை வெறும் 3.12 சதவீதத்தினரே கைகாட்டியிருப்பது அவலமே!
* தமிழ்நாட்டுக்கு இதுவரை ரஜினி எதையுமே செய்யவில்லை என்று ஐம்பத்தைந்து சதவீதத்தினர் சொல்லிக் காட்டி அவருக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளனர். அந்த கூற்று தவறு என்று வெறும் பதினாலரை சதவீதத்தினரே சொல்லியிருப்பதையும் கவனித்தாக வேண்டும்.