ஒரே தலைவராக சங்பரிவாரையும், இந்துத்துவாவையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்த்து நிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தி எதிர்ப்பு- திமுக
தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி புத்துாரில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், ராஜாஜி இந்தியை திணித்த போது முதல் இந்தி எதிர்ப்பு1937ஆம் ஆண்டு நடைபெற்றது. திருச்சி மாநகரில் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றதாகவும் தெரிவித்தார். ஹிந்தி மூலம் இந்துத்துவாவை கொண்டு வருவதாகவும், ஹிந்துத்துவா தமிழரின் அடையாளத்தை அழிக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் என்னிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார் நாங்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று சொல்கிறோம், நீங்கள் இந்து தானே ஏன் ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல கூடாது ஆனால், நீங்கள் பெரியார் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டபோது உங்கள் ஒவ்வொருவருடைய பெயரிலும் உங்களுடைய ஜாதியின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இருக்க யாருடைய பெயரிலும் ஜாதி இணைக்கப்படவில்லை இதுதான் பெரியார் என்று கூறினேன் என்றார்.
திமுகவின் கைப்பாவையாக ஆளுநர்.! ஒருநாளும் நடக்காது.. திமுகவை எச்சரித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்
ஒரே தலைவராக ஸ்டாலின்
ஜாதியும், மதமும் வேண்டுமென்றால் மக்களைபிரிக்கும் ஆனால் மொழி மட்டும் தான் நம்மை சேர்க்கும். அனைவரும் படிக்க வேண்டும் என்பது தான் எங்கள் மொழி, அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் மொழி, ஆனால் சமஸ்கிருதத்தை கொண்டு வந்து இந்துத்துவா பண்பாட்டை கொண்டு வர வேண்டும் என்று பாஜக திட்டமிடுவதாக குற்றம்சாட்டினார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரபஞ்சத்தின் எடை மாறாது என்று சொன்னவன் அன்று தொல்காப்பியன். ஆனால் அதை 200 ஆண்டுகளுக்கு முன்பு நியூட்டன் சொன்னதை நாம் இன்று படித்து வருகிறோம். அன்று பெரியாருக்கும் அண்ணாவிற்கும் கலைஞருக்கும் எதிராக வந்த ஆரியமும்,சமஸ்கிருதமும் இன்று பல மடங்கு உயர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக வந்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் அவர்கள் மூன்று தலைவர்களின் இணைந்த சக்தியாக இன்று ஒரே தலைவராக சங்பரிவாரையும்,இந்துத்துவாவையும் எதிர்த்து மு.க.ஸ்டாலின் நிற்பதாக குறிப்பிட்டார்.
தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்
இந்தியை நாங்கள் படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. நூறு ஆண்டுகளாக இந்தி பிரச்சார சபா இருக்கிறது. தேவைப்பட்டால் படித்துக் கொள்ள வேண்டியதுதான். என்னை 15 மாதம் சிறையில் வைத்தார்கள். அங்கு நான் இந்தியை கற்றுக் கொண்டேன். தற்போது இந்தி மறந்துவிட்டது வேண்டுமென்றால் மீண்டும் 15 மாதங்களில் சிறையில் வைத்தால் கற்றுக் கொள்ளப் போகிறேன் என தெரிவித்தார். தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என தற்போது கேள்வி எழுப்புகிறார்கள் அறிவியலுக்கு எதிராக இருப்பதால் தான் தீபாவளிக்க வாழ்த்து சொல்லவில்லையென கூறினார்.
இதையும் படியுங்கள
அண்ணாமலை பார்ட் 2 இவர்தான்.. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கடுமையாக விமர்சித்த துரை வைகோ.!!