மன்னிப்பா? அல்லது கண்துடைப்பா?ஆ.ராசாவின் நாடகம்

By Asianet TamilFirst Published Mar 29, 2021, 3:12 PM IST
Highlights

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை தரம் தாழ்ந்த வகையில் பேசியதற்கு, அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் தான் மன்னிப்பு தெரிவிப்பதாக திமுக எம்.பி. ராஜா தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்வதை தொடருவேன் என்று இதன் மூலம் ராஜா தெரிவிக்கிறாரா? என்று பொது வெளியில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை தரம் தாழ்ந்த வகையில் அநாகரிகமான வார்தையால் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா விமர்சனம் செய்தார். இதற்கு ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திருவொற்றியூரில் பிரச்சாரம் செய்தபோது, தனது தாயை எப்படி எல்லாம் இழிவாக பேசுகிறார்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஊட்டியில் ராஜா, “அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் மன்னிப்பு  தெரிவிப்பதில் தயக்கம் இல்லை” என்று கூறினார். ராஜாவின் பேச்சிலிருந்து, அரசியல் காரணங்களுக்காக தரம் தாழ்ந்த வகையில் பேசுவதை தொடர்வேன் என்று ராஜா இதன் மூலம் தெரிவிக்கிறார் என்றும் பிரச்சாரத்தில் தொடர்ந்து கீழ்த்தரமான பேச்சுகளை தொடர்வேன் என்றும் ராஜா தெரிவித்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். 

ராஜாவின் மன்னிப்பு என்பது கண் துடைப்பு நாடகம் என்பதற்கு தி.மு.கவினர் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பேசி வருவதே சாட்சி என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 

click me!