எரிமலை போன்றவர் ஓபிஎஸ்.. உடனே வெடிக்க மாட்டார்.. வெயிட் அண்ட் சீ.. மருது அழகுராஜ்..!

By vinoth kumar  |  First Published Feb 13, 2023, 11:51 AM IST

இரட்டை இலை சின்னம் ஒருபோதும் முடங்கி விடக்கூடாது என்பதற்காக ஓபிஎஸ் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்தார். ஆனால், இந்த பெருந்தன்மையை சிலர் கோழைத்தனம் என்று விமர்சிக்கின்றனர்.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கடுமையான தண்டனையை கொடுப்பார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இரட்டை இலை சின்னம் ஒருபோதும் முடங்கி விடக்கூடாது என்பதற்காக ஓபிஎஸ் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்தார். ஆனால், இந்த பெருந்தன்மையை சிலர் கோழைத்தனம் என்று விமர்சிக்கின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கடுமையான தண்டனையை கொடுப்பார்கள். ஆனால் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- இது திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் அளவுக்கு இருக்கு! ஏதாவது செய்யுங்கள்! ஆளுங்கட்சியால் அலறும் ஜெயக்குமார்.!

இப்படியொரு குழப்பமான மனநிலைக்கு தொண்டர்கள் ஆளாகியுள்ளார். தனது பெயரில் அதிமுகவை பட்டா போடுங்கள் என்று செயல்பட்டு வரும் இபிஎஸ்க்கு அரசியல் மிக விரைவில் முடிவுக்கு வரப் போகிறது. தொண்டர்களின் உரிமையை மீட்பதற்காக தான் ஓபிஎஸ் போராடி வருகிறார். ஓபிஎஸ் பாணியில் மென்மைத்தனமும், அமைதியும் இருப்பதாக சிலர் கருதுகிறார்கள். 

இதையும் படிங்க;- கசாப்புக்கடைக்காரனை நம்பிப் போகலாம்.. காமுகனை நம்பி தான் போகக்கூடாது.. ஜெயக்குமாரை பங்கம் செய்த புகழேந்தி.!

ஆனால் என்னை பொறுத்தவரை எரிமலை உடனடியாக வெடிக்காது. புகைந்து கொண்டே இருக்கும். கடைசியில் வெடிக்கும் போது சேதாரம் பெரிதாக இருக்கும். ஓபிஎஸ் அமைதி பல செய்திகளை சொல்லுகிறது. எடப்பாடி பழனிசாமியிடம் பொருளாதாரத்தை தவிர்த்து, வேறு எதுவும் கிடையாது. எடப்பாடி பழனிசாமியின் அரசியல் தவறு என்று அவருடன் இருப்பவர்களே சொல்கிறார்கள். அதிமுக பிளவுபட்டால், திமுக எளிதாக வெற்றிபெறும். வரலாற்றில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது மருது அழகுராஜ் கூறியுள்ளார். 

click me!