பேனா சிலையை உடைப்பது சாதனை ஆகாது..! ஈரோடு தேர்தலில் ஈவிகேஎஸ் வெற்றி உறுதி..! கார்த்தி சிதம்பரம்

 நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதியை குறைத்து உள்ளார்கள். மற்றொருபக்கம், சிறுபான்மையினருக்கு கொடுக்கப்படும் கல்வி உதவித்தொகையை நிறுத்தி உள்ளார்கள். இந்த இரண்டு செயல்களே, பாஜகவின் சமூக பார்வையை எப்படி உள்ளது என்பதை காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 


பட்ஜெட் - தலையெழுத்தை தீர்மானிக்காது

தமிழ்நாடு கட்டுமானம் அமைப்புசாரா தொழிற்சங்க மண்டல மாநாடு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, ஒரே ஒரு பட்ஜெட், நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்காது என கூறியவர்,  பங்கு சந்தை மீதுள்ள நம்பிக்கை குறையும் போதெல்லாம், தங்கத்தின் மீதான விலையும் உயரும் என தெரிவித்தார்.  காங்கிரஸ் ஆட்சியில் 640வது இடத்தில் இருந்த  அதானி தற்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது எப்படி என கேள்வி எழுப்பினார்.  

Latest Videos

அதானி மீது விசாரணை

பொய்யாகத்தான் தன் நிறுனத்தை அதானி உருவாக்கினார் என்பதை விசாரணை மூலமாகத்தான் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியவர், பாராளுமன்ற கூட்டுக்குழு மூலமாக உண்மையை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.மத்திய நிதி நிலை அறிக்கையில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதியை குறைத்து உள்ளார்கள். மற்றொருபக்கம், சிறுபான்மையினருக்கு கொடுக்கப்படும் கல்வி உதவித்தொகையை நிறுத்தி உள்ளார்கள். இந்த இரண்டு செயல்களே, பாஜகவின் சமூக பார்வையை எப்படி உள்ளது என்பதை காட்டுவதற்கு போதுமான ஆதரமாக இருப்பதாக கூறினார்.

ஈவிகேஸ் வெற்றி உறுதி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.தமிழ்நாட்டில், பேனா சிலையை உடைப்பது சாதனை ஆகாது எனவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

நாட்டை குடும்பமாக பார்க்கும் மோடி..! ஏற்றத்தாழ்வுகளை தீவிரப்படுத்திய திராவிட மாடல்- ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு

click me!