ராதாரவிக்கு ஒரு நீதி.. ஆ.ராசாவுக்கு ஒரு நீதியா..? ஸ்டாலினை பங்கம் செய்த அமைச்சர் ஜெயக்குமார்..

By Ezhilarasan BabuFirst Published Mar 31, 2021, 12:22 PM IST
Highlights

குறிப்பாக பெண்களை பற்றி  இழிவாக பேசுவது திமுகவின் கலாச்சாரம் என்று குற்றம் சாட்டினர். மேலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பேசு முடியாது அது குறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதாக கூறினார்.

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு பேசிய  ராதாரவி மீது உடனடி நடவடிக்கை எடுத்த திமுக ஆ. ராசா  மீது நடவடிக்கை எடுக்காதாது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் மூல கொத்தளம் பகுதியில் சைக்கிள் ரிக்ஷா வில் நின்ற படி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அப்பகுதியில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 1989 ஆண்டு ஜெயலலிதா அவர்களை சட்டமன்றத்தில் திமுகவினர் அவமானம் செய்தார்கள். குறிப்பாக பெண்களை பற்றி  இழிவாக பேசுவது திமுகவின் கலாச்சாரம் என்று குற்றம் சாட்டினர். மேலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பேசு முடியாது அது குறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதாக கூறினார். திமுகவின்  ஒட்டுமொத்த நிர்வாகிகள் பேச்சை தொகுத்து பார்த்தால் பெண்களுக்கு எதிரான இழிவு பேச்சு என்பது தெரியவரும் என்று கூறினார். 

மேலும் பேசிய அவர், பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு பேசிய  ராதாரவி மீது திமுகவின் தலைமை உடனே நடவடிக்கை எடுத்தது ஆனால் ஆ.ராசா  மீது நடவடிக்கைகள் எடுக்காதாது ஏன் என்று கேள்வியும் எழுப்பினார். இராயபுரம் தொகுதியில் திமுக டெபாசில் கூன பெறாது என்று உறுதி பட தெரிவித்தார். முன்னதாக அக்கோவிலில் இன்று திருமணம் நடந்த புதுமண தம்பதியை சைக்கிள் ரிக்ஷா வில் ஏற்றி வாழ்த்துக்கள் தெரிவித்தும். பிறந்து சில மாதங்களே ஆன ஒரு குழந்தைக்கு ராமசந்திரன் என பெயர் வைத்தும் வாக்கு சேகரித்தார். அவருக்கு அத்தொகுதியில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

click me!