ஆ.ராஜாவிடம் மனசாட்சி இருக்கு... மோடிக்கெதிராக கடுப்பான கனிமொழி..!

Published : Mar 31, 2021, 12:08 PM IST
ஆ.ராஜாவிடம் மனசாட்சி இருக்கு... மோடிக்கெதிராக கடுப்பான கனிமொழி..!

சுருக்கம்

பெண்கள் குறித்து ஹெச்.ராஜா பேசியதை கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை.

பெண்கள் குறித்து ஹெச்.ராஜா பேசியதை கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை. திமுகவுக்கு மனசாட்சி உணர்வு இருந்ததால்தான் தனது பேச்சுக்கு ஆ.ராசா மன்னிப்பு கேட்டார் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மோடி கண்டித்தாரா? பொள்ளாச்சி விவகாரத்தில் நியாயம் கிடைத்ததா என முதல்வரிடம் பிரதமர் கேட்டாரா? பெண்கள் குறித்து ஹெச்.ராஜா பேசியதை கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை. திமுகவுக்கு மனசாட்சி உணர்வு இருந்ததால்தான் தனது பேச்சுக்கு ஆ.ராசா மன்னிப்பு கேட்டார்” எனக் குறிப்பிட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாய் குறித்தும் அவரது பிறப்பு குறித்தும் திமுக எம்.பி ஆ.ராசா பரப்புரையில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆ.ராசா அவரின் பேச்சு குறித்து விளக்கமளித்ததோடு முதலமைச்சர் உண்மையிலேயே கலங்கியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்திருந்தார். ராஜாவின் பேச்சுக்கு கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது கனிமொழி பெண்கள் குறித்து ஹெச்.ராஜா பேசியதை கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை எனக்கூறி இருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!