குமாரபாளையம் கள நிலவரம்...! அமைச்சர் தங்கமணி வெல்வாரா?

By Selva KathirFirst Published Mar 31, 2021, 12:18 PM IST
Highlights

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி உருவாக்கப்பட்டு நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலு அதிமுகவே வென்றுள்ளது. இரண்டு முறையும் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் தங்கமணி தான்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி உருவாக்கப்பட்டு நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலு அதிமுகவே வென்றுள்ளது. இரண்டு முறையும் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் தங்கமணி தான்.

தமிழக அமைச்சர்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக மிக நெருக்கமானவராக கருதப்படுபவர் தங்கமணி. இதே போல் சசிகலா அதிமுகவில் இருந்து ஓரங்கப்பட்டபிறகு கட்சியை காப்பாற்றிய முக்கிய நிர்வாகிகளுள் தங்கமணி மிக மிக முக்கியமானவர். கூட்டணி விவகாரங்கள், தொகுதிப் பங்கீடு போன்றவற்றில் கூட அமைச்சர் தங்கமணியின் பங்கு மிக முக்கியம். கடந்த நான்கு வருடங்களில் அமைச்சராகவும், முதலமைச்சருக்கு நெருக்கமாகவும் இருந்து குமாரபாளையம் தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்களை தங்கமணி நிறைவேற்றியுள்ளார்.

குமாரபாளையம் தொகுதி முழுவதுமே தற்போது சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர முதியோர் உதவித் தொகை, விதவைகள் பென்சன் என தொகுதிக்கு உட்பட்டவர்களின் அனைத்து தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்ற தனது எம்எல்ஏ அலுவலகத்தில் தனியாக ஆட்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இதனால் எம்எல்ஏ மீது தொகுதியில் அதிருப்தி என்பதே இல்லை என்று சொல்லலாம். கடந்த 2011 தேர்தலில் 27ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தங்கமணி கடந்த தேர்தலில் சுமார் 50ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதன் மூலமே எம்எல்ஏவாக தங்கமணியின் செல்வாக்கை தொகுதியில் தெரிந்து கொள்ள முடியும். இது தவிர பண பலம், தொண்டர் பலமும் அமைச்சர் தங்கமணிக்கு அதிகம் கைகொடுக்கிறது. திமுக சார்பில் குமாரபாளையம் தொகுதியில் வெங்கடாசலம் களம் இறங்கியுள்ளார். பணபலத்தில் அமைச்சர் தங்கமணிக்கு திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தில் பெரிய அளவில் ஈடுகொடுக்க முடியவில்லை. தேர்தல் பணிகளிலும் அமைச்சரின் அனுபவம் திமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளுகிறது. தவிர தொகுதியில் அதிகமாக உள்ள கொங்கு கவுண்டர்கள் வாக்கு சிந்தாமல் சிதறாமல் இந்த முறையும் தங்கமணிக்கே என்கிறார்கள். அந்த வகையில் குமாரபாளையத்தில் அமைச்சர் தங்கமணிக்கு சாதகமான நிலையே காணப்படுகிறது.

click me!