பர்த்டே பார்ட்டியில், போதையில் தள்ளாடிய சிறுமி.. மெத்தையில் தள்ளி கதறவிட்ட கொடூரன்..

Published : Jul 05, 2021, 01:21 PM IST
பர்த்டே பார்ட்டியில், போதையில் தள்ளாடிய சிறுமி.. மெத்தையில் தள்ளி கதறவிட்ட கொடூரன்..

சுருக்கம்

இரவு சுயநினைவின்றி தள்ளாடிய சிறுமியை ஸ்வீட்டோஸ் அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சிறுமி எழுந்து பார்த்தபோது ரிசார்டில் அவர் மட்டும் தனித்து விடப்பட்டதையும்,

பிறந்தநாள் கொண்டாட்டதிற்காக சென்ற 17 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகளான 17 வயது சிறுமி தனது தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டதிற்காக தனது நண்பரான ஸ்வீட்டோஸ் (20) என்பவருடன் நேற்று முன் தினம் கோவளம் பகுதியிலுள்ள ரிசார்டுக்குச் சென்றுள்ளார். 

அன்று இரவு கொண்டாட்டத்தின்போது ஸ்வீட்டோஸ் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலக்கிக் குடிக்க கொடுத்ததாக கூறப்படுகிறது. இரவு சுயநினைவின்றி தள்ளாடிய சிறுமியை ஸ்வீட்டோஸ் அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சிறுமி எழுந்து பார்த்தபோது ரிசார்டில் அவர் மட்டும் தனித்து விடப்பட்டதையும், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதையும் உணர்ந்து வீட்டிற்கு வந்து தனது தாயிடம் நடந்தவற்றை கூறி கதறியுள்ளார். 

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின்  தாய், சிறுமியுடன் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்  சென்று தன் மகளுக்கு நடந்த கொடுமை குறித்து நேற்று மாலை புகார் அளித்தார். புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழி வழக்கு பதிவு செய்து குற்றாவாளியான ஸ்வீட்டோஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!