இரண்டு மகள்களை மாட்டுக்கு பதிலாக ஏர் பூட்டி உழவு செய்த விவசாயி.! அதிர்ந்து போன நடிகர் சோனுசூட்.!

By T BalamurukanFirst Published Jul 27, 2020, 7:52 AM IST
Highlights

ஆந்திர மாநிலத்தில் தனது இரண்டு மகள்களை மாடுகளுக்கு பதிலாக ஏர் இழுக்க வைத்த விவசாயின் வறுமையை நினைத்து ஏர் பூட்டிய மாட்டாக வலம் வந்த பெண் பிள்ளைகளுக்கு பதிலாக டிராக்டர் வழங்கி விடுதலை கொடுத்திருக்கிறார்  பாலிவுட் நடிகர் சோனு சூட் .
 

ஆந்திர மாநிலத்தில் தனது இரண்டு மகள்களை மாடுகளுக்கு பதிலாக ஏர் இழுக்க வைத்த விவசாயின் வறுமையை நினைத்து ஏர் பூட்டிய மாட்டாக வலம் வந்த பெண் பிள்ளைகளுக்கு பதிலாக டிராக்டர் வழங்கி விடுதலை கொடுத்திருக்கிறார்  பாலிவுட் நடிகர் சோனு சூட் .

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியை சேர்ந்தவர் விவசாயி நாகேஷ்வர ராவ். இவர் டீ கடையும் நடத்தி வருகிறார். ஆனால், ஊரடங்கு காரணமாக டீ கடையில் போதிய வருமானம் இல்லாததால்  தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய முடிவெடுத்திருக்கிறார். ஆனால், அவரிடம் மாடுகள் இல்லை; பணமும் இல்லை; டிராக்டர்  வாடகைக்கு எடுத்து உழவு செய்யும் அளவுக்கு அவரிடம்  பணமும் இல்லை. இந்த நிலையில்தான் விவசாயிக்கு, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உதவ முன்வந்ததோடு ஊக்கம் அளித்திருக்கிறார்கள்.

 அந்த உத்வேகத்தோடு மாடுகளுக்கு பதிலாக மகள்களை ஏர் இழுக்கச்செய்து தன் நிலத்தில் உழவு செய்தார் நாகேஷ்வர ராவ். அந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இச்சம்பவத்தை அறிந்த பாலிவுட் நடிகர் சோனு சூட், விவசாயி குடும்பத்திற்கு ஒரு டிராக்டர் வழங்குவதாகவும், அந்த பெண் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். அதன்படி  காயத்ரி ஏஜென்சி மூலம் பாலிவுட் நடிகர் சோனு சூட், விவசாயிக்கு டிராக்டர் வழங்கி உதவி செய்திருக்கிறார். 

நடிகர் சோனுவின் உதவியால் டிராக்டரை பெற்றுக்கொண்ட விவசாயி குடும்பத்தார்  நடிகருக்கு நன்றி தெரிவித்தனர்.. கொரோனா எத்தனை பேருடைய வாழ்க்கையில் திருவிளையாடலை நடத்தியிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு எடுத்துக்காட்டு தான்.

click me!