உடலில் இருந்து வெளியாகும் துர்நாற்றத்தை வைத்து கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி. பிரிட்டிஸ் விஞ்ஞானிகள் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jun 14, 2021, 1:28 PM IST
Highlights

கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு சோதனைகள் நடந்து வரும் நிலையில் தற்போது மனித உடலில் இருந்து வெளியாகும் வாடையை வைத்து  covid-19 கண்டுபிடிக்கும் கருவியை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு சோதனைகள் நடந்து வரும் நிலையில் தற்போது மனித உடலில் இருந்து வெளியாகும் வாடையை வைத்து  covid-19 கண்டுபிடிக்கும் கருவியை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். டர்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் பயோடெக் நிறுவனமான ரோபோ சயின்டிஃபிக் லிமிடெட் தலைமையிலான (எல் எஸ் எச் டி எம்) ஆராய்ச்சியாளர்கள் இந்த சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். சென்சார் மூலம் அது இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. மூன்றாவது அலை நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவை தாக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு நாடுகள் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸை கண்டு பிடிப்பது மற்றும் அதை  தடுப்பதற்கான பல்வேறு ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் என்பது பொதுவாக கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் எளிதில் பரவக்கூடிய வைரஸ் எனவே, அதை அடிப்படையாக வைத்து,  வாசனையை நுகர்தல் மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா.? இல்லையா என்பதை கண்டறியும் வகையிலான எலக்ட்ரானிக் சாதனத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட்  டிராபிகல் மெடிசின் (எல் எஸ் எச் டி எம்) மற்றும் டர்ஹாம் பல்கலைக்கழகம் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் covid-19 நோய்த்தொற்று ஒரு சிறப்பியல்பு வாசனையை  கொண்டிருப்பதை கண்டறியப்பட்டுள்ளது. 

உடலில் இருந்து ஆவியாகும் கரிம சேர்மங்கள் அதாவது உடலில் இருந்து வெளியாகும் வியர்வை அதன் விளைவாக உடலில் ஏற்படும் துர்நாற்றத்தைக் கொண்டு சென்சார் மூலம் கோவிட் தொற்று கண்டறியப்படுகிறது. டர்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் பயோடெக் நிறுவனமான ரோபோ சயின்டிஃபிக் லிமிடெட் தலைமையிலான குழுவினர் இந்த சாதனத்தை கூட்ட நெரிசல் மிகுந்த பகுதியில் சென்சார் மூலம் சோதனை செய்தனர். அதன் முடிவுகள் மிகவும் நம்பிக்கை வூட்டுவதாகவும் மேலும் இந்த தொழில் நுட்பத்தை விரைவாக மற்றும் பொதுவான சோதனையாக பயன்படுத்துவதற்கான திறனை தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது.  என்று எல்.எஸ்.எச்.டி.எம் நோய்க்கான கட்டுப்பாட்டு துறை தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் லோகன் கூறியுள்ளார். மேலும் மனித சோதனைகள் அதன் முடிவுகள் சமமான துல்லியமானவை என்பதை நிரூபிக்க இன்னும் மேலதிக சோதனைகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த சாதனங்கள் பொது இடங்களில் பயன்படுத்தும் வகையில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது, மிக எளிதாக எந்த இடத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் எந்த ஒரு தொற்று நோயும் பரவுவதில் இருந்து மக்களை காப்பாற்ற இந்த சாதனம் உதவியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சியில் உடல் துர்நாற்றத்தை கண்டறிய 54 நபர்கள் மத்தியில் இச்சோதனை நடத்தப்பட்டது, அதில் 27 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 

click me!