மக்களே மறந்துடாதீங்க.. ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் விநியோகம்.. நாளை முதல் ஆரம்பம்..

By Ezhilarasan BabuFirst Published Jun 14, 2021, 12:57 PM IST
Highlights

கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை  நாளை முதல் வழங்கப்படவுள்ளது எனவும், மக்கள் இந்த மாத இறுதி வரை அவரசமின்றி பெற்றுக்கொள்ளலாம் எனவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.  

கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை  நாளை முதல் வழங்கப்படவுள்ளது எனவும், மக்கள் இந்த மாத இறுதி வரை அவரசமின்றி பெற்றுக்கொள்ளலாம் எனவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் மிக தீவிரமாக பரவியதன் எதிரொலியாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் துயர் துடைக்கும் வகையில் குடும்பத்திற்கு தலா நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியிலேயே அறிவித்திருந்தார். அதன்படி கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டது. 

இந்த மாதம்  கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை  2000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதனுடன் சேர்த்து ஒரு மாத காலத்துக்கு தேவையான 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வினியோகம் ஜூன் 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது, வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் மக்களுக்கு டோக்கன்களை விநியோகித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 4000 ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் முதலமைச்சர்  கையெழுத்திட்டார். 

அதன் படி முதல் தவணை கொடுக்கப்பட்டது. இரண்டாவது தவனை நாளை முதல் வழங்கப்படவுள்ளது. அதனோடு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படவுள்ளது. முறையாக டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது, பொது மக்கள் அவசரமின்றி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். நாளை முதல் இந்த மாத இறுதி வரை பெற்றுக்கொள்ளலாம், சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பெற்றுக்கொள்ள வேண்டும். நடமாடும் நியாய விலை கடைகள் மூலமாக பொருட்கள் விநியோகம் செய்வது குறித்து  முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  

 

click me!