தமிழகம் முழுவதும் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது. உயிரியல் பிரிவில் மாணவர்கள் ஆர்வம்.

Published : Jun 14, 2021, 12:35 PM IST
தமிழகம் முழுவதும் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது. உயிரியல் பிரிவில் மாணவர்கள் ஆர்வம்.

சுருக்கம்

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அசோக்நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற்று வருகிறது.  

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அசோக்நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கமாக 10 வகுப்பு மதிபெண்கள் அடிப்படையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும். 

 

இந்தாண்டு  9-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்து 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

இந்தாண்டு வழக்கத்தை விட ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 15 சதவீதம் கூடுதலாக மாணவர் சேர்க்கையை நடத்த சிறப்பு அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளதன் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு உயிரியல் பிரிவை தேர்வு செய்வதில் மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!