பள்ளி மாணவிகளிடம் பாலியல் வக்ரம்.. டேராடூனில் பதுங்கிய சிவசங்கர் பாபா.. வலைபோட்டு தேடும் சிபிசிஐடி போலீஸ்.

Published : Jun 14, 2021, 12:10 PM ISTUpdated : Jun 14, 2021, 12:18 PM IST
பள்ளி மாணவிகளிடம் பாலியல் வக்ரம்.. டேராடூனில் பதுங்கிய சிவசங்கர் பாபா.. வலைபோட்டு தேடும் சிபிசிஐடி போலீஸ்.

சுருக்கம்

சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் விவகாரத்தில் முதற்கட்டமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் சுசில் ஹரி பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.  

சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் விவகாரத்தில் முதற்கட்டமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் சுசில் ஹரி பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்த நிலையில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது 3 புகார்கள் அளிக்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி கடந்த 13 ஆம் தேதி டி.ஜி.பி திரிபாதி உத்தவிட்டார். 

இந்நிலையில் மாணவிகள் மூலம் பெறப்பட்ட 3 புகார்களின் அடிப்படையில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பொக்சோ வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் துவங்கியுள்ளனர். சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் எஸ்.பி விஜயகுமார் தலைமையில் விசாரணை அதிகாரிகளாக டி.எஸ்.பி குணவர்மன் மற்றும் ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதற்கட்டமாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் இருந்து வழக்கு தொடர்பான புகார், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று புகார் அளித்தவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களை பெற சி.பி.சி.ஐ.டியினர் திட்டமிட்டுள்ளனர். 

அதேபோல மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா தரப்பு அவர் டேராடூன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என ஆதாரங்களை சமர்பித்துள்ள நிலையில் அது குறித்தான உண்மைத் தன்மையை கண்டறியவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சுசில் ஹரி பள்ளிக்கு நேரடியாகச் சென்று நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!