இந்தியாவில் இதுவரை 95.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு... சுகாதாரத்துறை தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Dec 4, 2020, 12:42 PM IST
Highlights

இந்தியாவில் இதுவரை 95.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

இந்தியாவில் இதுவரை 95.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 95,71,559 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 90,16,289 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,16,082 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,39,188 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 36,594 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 42,916 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர். 540 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 94.20 ஆகவும், இறப்பு சதவீதம் 1.45 ஆகவும் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

click me!