9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்... மின்னல் வேகத்தில் தட்டி தூக்கும் அதிமுக.. ஓபிஎஸ்-இபிஎஸ் அதிரடி அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Sep 15, 2021, 11:34 AM IST
Highlights

(மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் கட்டணத் தொகை -5000,  ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கட்டணத்தொகை-3000) என தற்போது நடைபெற உள்ள ஊராட்சி உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கனவே விருப்பமனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள் அதற்கான அசல் ரசீது மற்றும் நகலினை சம்பந்தப்பட்ட மாவட்ட கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம், 

9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட அனுமதி கோருவோரிடம் இருந்து விண்ணப்ப மனுக்கள் பெறப்படுவது குறித்து அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

அதில் கூறியிருப்பதாவது :- காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்ட கழக அலுவலகங்களில் உரிய கட்டண தொகையை செலுத்திய விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். 

(மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் கட்டணத் தொகை -5000,  ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கட்டணத்தொகை-3000) என தற்போது நடைபெற உள்ள ஊராட்சி உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கனவே விருப்பமனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள் அதற்கான அசல் ரசீது மற்றும் நகலினை சம்பந்தப்பட்ட மாவட்ட கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம், சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் விருப்பமனு பெறுவது சம்பந்தமான விவரங்களை கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

அதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான அரசு அறிவித்திருக்கும், வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டும் முகக்கவசம் அணிந்து, இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விருப்ப மனுக்களை பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!